Home / Photos
சூர்யா ஸ்டைலில்.. பிரிவை மறக்க ஒர்க் அவுட்டில் இறங்கிய சீரியல் நடிகை.. யாருன்னு பாத்திங்களா?
By Chandru
சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி தீவிர ஒர்க் அவுட்டில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
1/8
Photo Credit: instagram
Share
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் நடிகை பிரியங்கா நல்காரி. தாய்மார்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
2/8
Photo Credit: instagram
Share
'ரோஜா' சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா. ரோஜாவில் கிடைத்த வரவேற்பை விட சீதா ராமன் சீரியலில் அமோக வரவேற்பு கிடைத்து.
3/8
Photo Credit: instagram
Share
மாமியார் மருமகள் சண்டையை பார்க்க யாருக்கு தான் பிடிக்காது அதன்படி சீதா ராமன் சீரியலில் ஒரே மாமியார் மருமகள் சண்டை தான் இது சீரியல் மீதான சுவாரசியத்தை அதிகப்படுத்தியது. இதன் மூலம் ப்ரியங்காவுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாயினர். சின்னத்திரையில் டாப் நடிகையாக இருந்த பிரியங்கா திடீரென ராகுல் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
4/8
Photo Credit: instagram
Share
பல வருடங்கள் காதலித்து வந்தவர்கள் திடீரென கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களின் திருமணம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து. அச்சச்சோ இனி பிரியங்கா நடிக்க மாட்டாங்களா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வர, அதேபோல் சீரியல் வாழ்க்கைக்கு எண்டு கார்ட் போட்டுவிட்டார் பிரியங்கா.
5/8
Photo Credit: instagram
Share
கணவருடன் வெளிநாட்டில் செட்டிலான பிரியங்கா சோசியல் மீடியா மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தார். அதன்பின்னர் என்ன நடந்ததோ மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி சீரியலில் கதாநாயகியாக மீண்டும் என்ட்ரி கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.
6/8
Photo Credit: instagram
Share
திருமணத்திற்கு பின் சீரியல், குடும்பம் என ஜுலியாக இருந்த பிரியங்கா திடீரென தனது கணவருடன் சேர்ந்து ஊர் சுற்றிய புகைப்படங்கள், திருமண புகைப்படங்கள் உள்ளிட்டவைகளை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். இதன் மூலம் பல வருட காதல் முடிவுக்கு வந்துவிட்டது இருவரும் பிரிந்துவிட்டனர் என பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் மூலம் தெரியப்படுத்தினார்.
7/8
Photo Credit: instagram
Share
பிரிவுக்கு பின் ஸெல்ப் லவ், தனிமை என போஸ்ட் செய்து வந்த பிரியங்கா ஜிம் ஒர்க் அவுட்டில் இறங்கிவிட்டார். ஆதாவது வாரணம் ஆயிரம் படத்தில் வரும் சூர்யா காதலையே மறக்க ஒர்க் அவுட் செய்தது போல் பிரியங்காவும் ஜிம்மில் இறங்கிவிட்டார்.
8/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் பிரியங்கா ஜிம் சூட்டில் ஒர்க் அவுட் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களின் கவனத்தி ஈர்த்து வருகிறார். விவாகரத்துக்கு பின் தற்போது சீரியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார் பிரியங்கா.


Click it and Unblock the Notifications