Home / Photos
புது பிசினஸ் தொடங்கிய 'புன்னகை அரசி' சினேகா.. வாழ்த்துக்களை குவிக்கும் ஃபேன்ஸ்!
By Chandru
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. தற்போது அவர் புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
1/7
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சினேகா, தற்போது புதிதாக பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
2/7
Share
கடந்த 2000ம் ஆண்டு என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சினேகா. முதல் படத்திலேயே சினேகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
3/7
Share
கமல், அஜித், விஜய், விக்ரம், சிம்பு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் முதன்மை நாயகியாக வலம் வந்தவர்.
4/7
Share
ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. தென்னிந்திய சினிமாவின் ஸ்டார் நாயகியாக வழக்கு வந்த சினேகா, 'அச்சமுண்டு அச்சுமுண்டு' என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் இருவருக்கும் இடையே காதல் மலர தொடங்கியது.
5/7
Share
இருவரும் சுமார் மூன்று ஆண்டுகள் சீரியசாக காதலித்து வந்தனர். கடந்த 2012ல் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு தற்பொழுது ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் சில காலங்கள் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்தார் சினேகா.
6/7
Share
அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் டிவி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்து வந்தார். அந்தவகையில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் GOAT படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் தற்போது புது பிஸ்னஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார் சினேகா. அதன்படி சினேகாலயா சில்க்ஸ் என்ற பட்டுசேலை பிஸினஸை தொடங்கவுள்ளார். பட்டுசேலைக்கென பிரத்யேகமான துணிக்கடையை வரும் 12ம் தேதி கோலாகலமாக ஓபன் செய்யவுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்த சினேகாவின் புது பிஸினஸுக்கு ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications