Home / Photos
சேலையில் வின்டேஜ் ஷூட்.. கவனத்தை ஈர்க்கும் சோபிதா துலிபாலா!
By Divya Bala
நடிகை சோபிதா துலிபாலா, தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
1/5
Photo Credit: Instagram
Share
ஷோபிதா துலிபாலா, 2013 ஆம் ஆண்டு நடந்த பெமினா மிஸ் இந்தியா போட்டியில் ‘மிஸ் இந்தியா எர்த்’ பட்டத்தை வென்று, அதன் மூலம் உலகளாவிய அழகிப் போட்டியான ‘மிஸ் எர்த்’ போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
2/5
Photo Credit: Instagram
Share
அணுராக் காஷ்யப் இயக்கிய ‘ரமன் ராகவ் 2.0’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கினார். இத்திரைப்படத்திற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் பாராட்டு பெற்றார்.
3/5
Photo Credit: Instagram
Share
அமேசான் பிரைமில் வெளியான பிரபல தொடரான ‘மேட் இன் ஹெவன்’-ல் தாரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து தெலுங்கில் ‘குடாசாரி’, ‘மேஜர்’, மலையாளத்தில் ‘மூத்தோன்’, ‘குருப்' படங்களில் நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஹாலிவுட் இயக்குநர் டெவ் பட்டேல் இயக்கிய ‘மங்கி மேன்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு நடிகர் சைதன்யாவிற்கும் திருமணம் நடந்தது.
5/5
Photo Credit: Instagram
Share
சோபிதா தற்போது இன்ஸ்டாகிராமில், அழகான ப்ளூ நிற புடவையில் கான்ட்ராஸ்ட் மெரூன் கலர் பந்தாணி பிளவுஸ் மேட்ச் செய்துள்ளார். கையில் வளையல்களுடன், வின்டேஜ் லுக்கில் கம்மல் அணிந்து சூப்பர் லுக்கில் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications