Home / Photos
தாவணியில் வசீகரிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.. விலை என்ன தெரியுமா?
By Divya Bala
நடிகை ஸ்ரீதேவி தற்போது தாவணியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
1/5
Photo Credit: Instagram
Share
சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், ஸ்ரீதேவிக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், குழந்தை நட்சத்திரமாக ரிக்ஷா மாமா மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில் 5 படங்களில் நடித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
2002ல் காதல் வைரஸ் மூலம் தமிழ் ஹீரோயினாக வந்தார். பிரியமான தோழி படத்தில் ஜூலி கதாபாத்திரம், வினித்துடன் இணைந்து நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பு பெற்றுத்தந்தது.
3/5
Photo Credit: Instagram
Share
தித்திக்குதே படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருது பெற்றார். பின்னர் தெலுங்கில் நின் இஸ்டபட்னு படத்திற்கும் அதே விருது வென்றார். கன்னட, தெலுங்கு, தமிழில் மாறிமாறி நடித்தார்.
4/5
Photo Credit: Instagram
Share
தமிழில் 4 படங்களில் ஹீரோயினாக நடித்த பிறகு, தேவதையை கண்டேன் அவரது கடைசி படம். ராகுல் என்பவரை திருமணம் செய்தார். 10 வருடங்களுக்கு பிறகு தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராக திரும்பி, தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: Instagram
Share
போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தும் ஸ்ரீதேவி, அணிந்திருக்கும் இந்த தாவணியின் விலை ரூ.36,900. இது பியூர் பந்தனி பைதானி சில்க் லெஹங்கா, ரா சில்க் டாப், நெக் மற்றும் ஸ்லீவ்ஸில் ஹேண்ட்வொர்க் செய்யப்பட்ட வடிவமைப்புடன் வருகிறது.


Click it and Unblock the Notifications