Home / Photos
PHOTOS : வடிவேலுவின் ரீல் மனைவி ஸ்வர்ணாவை நியாபகம் இருக்கா? கணவர், குழந்தைகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..
By Chandru
சந்திரமுகி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்வர்ணாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
சந்திரமுகி படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஸ்வர்ணாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
நடிகை ஸ்வர்ணா, சந்திரமுகி திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடிகை ஸ்வர்ணா மெதிவ் நடித்திருப்பார்.
3/7
Photo Credit: instagram
Share
கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்வர்ணா, மலையாளத்தில் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் கலக்கிய ஸ்வர்ணா, 1994 ஆம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் விஜயகுமார், நடிகை காந்திமதி ஆகியோர் நடிப்பில் வெளியான 'தாய் மனசு' என்ற படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானார்.
4/7
Photo Credit: instagram
Share
மலையாளத்தில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஸ்வர்ணாவுக்கு தமிழில் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மலையாள சினிமாவுக்கு மீண்டும் திருப்பிய ஸ்வர்ணா, படங்கள் மற்றும் சீரியல்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வந்தார்.
5/7
Photo Credit: instagram
Share
மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். சினி துறையில் பட வாய்ப்புகள் குறைய அமெரிக்கா நாட்டு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
6/7
Photo Credit: instagram
Share
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்வர்ணா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
7/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் சமீபத்தில் ஸ்வர்ணா பதிவிட்ட லேட்டஸ்ட் இன்ஸ்டகிராம் பதிவு ரசிகர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நெட்டிசன்கள் ஸ்வர்ணாவின் புகைப்படத்தை கண்டு ஆச்சரியத்தில் ஏகப்பட்ட கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications