OTT: கதை தேர்வில் அதிகம் மெனக்கெடும் அசோக் செல்வன்.. ஓடிடியில் உள்ள டாப் 5 சிறந்த திரைப்படங்கள்
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பி. ரமேஷ் இயக்கத்தில் 2014ல் வெளிவந்த திரைப்படம் 'தெகிடி'. க்ரைம், மிஸ்ட்ரி, திரில்லர் மற்றும் கொஞ்சம் ரொமான்ஸ் கலந்த இந்த சூப்பர் ஹிட் படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணலாம்.
விஷால் வெங்கட் இயக்கத்தில் 2022ல் வெளிவந்த திரைப்படம் 'சில நேரங்களில் சில மனிதர்கள்'. நான்கு வெவ்வேறு மனிதர்களின் வாழ்கை கதையே சுற்றி நடக்கும் சுவாரசியமான கதைக்களம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதனை சுற்றி நடக்கும் அரசியலை பற்றிய படமாகும். இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணலாம்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் 2020ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஓ மை கடவுளே'. ரொமான்டிக்கான இந்த காதல் படத்தை இந்த வீக் எண்டு பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க. இப்படத்தை சோனி லைவ் மற்றும் ஜீ5 தளத்தில் பார்க்கலாம்.
இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் 2023ல் வெளிவந்த திரைப்படம் 'போர் தொழில்'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இந்த திரில்லர் படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றால் சோனி லைவ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications