Home / Photos
ஐபிஎல் 2026: வெற்றிமேல் வெற்றி! கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அசத்தல்.. போட்டோஸ்!
By Chandru
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியை ருசித்துள்ளது.
1/10
Photo Credit: PTI
Share
நேற்று மாலை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
2/10
Photo Credit: PTI
Share
முதல் இன்னிங்க்ஸ் விளையாடிய சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மான் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதன்படி 32 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
3/10
Photo Credit: PTI
Share
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் 7 ரங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஏற்கனவே தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி இந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் இருந்தது.
4/10
Photo Credit: PTI
Share
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஆயுஷ் மத்ரே 38 ரன்கள், டெவால்ட் ப்ரீவிஸ் 41 ரன்கள், சர்பராஸ் கான் 23 ரன்கள் என அணியின் ஸ்க்கோரை உயர்த்தினார்.
5/10
Photo Credit: PTI
Share
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
6/10
Photo Credit: PTI
Share
சுனில் நரைன் 24 ரன்கள், ரஹானே 28 ரன்கள், அங்கிரிஷ் 27 ரன்கள், ரோவ்மேன் பவல் 31 ரன்கள் மற்றும் ரமன்தீப் சிங் 35 ரன்கள் எடுத்தனர்.
7/10
Photo Credit: PTI
Share
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து சென்னையிடம் தோற்றது.
8/10
Photo Credit: PTI
Share
கொல்கத்தா அணி தோல்வியை தொடர்ந்து சென்னை அணி இரண்டாவது முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளது.
9/10
Photo Credit: PTI
Share
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சென்னை அணி தற்போது தொடர் இரண்டு வெற்றிகளை பதிவு செய்த நிலையில் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications