தொகுதி மறுவரையறை எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் கருப்பு கொடி போராட்டம்.. திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு!
தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கும் விதமாக இன்று தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்த முதல்வர் ஸ்டாலின் அழைப்புவிடுத்திருந்தார். அதன்படி மக்கள் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். திமுக கூட்டணி காட்சிகள் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் கருப்பு கொடி ஏற்றி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
தொகுதி மறுவரையறை மசோதா நகலை முதல்வர் ஸ்டாலின் எரித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
அமைச்சர் ரகுபதி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் பழனியப்பன், தனது ஆதரவாளர்களுடன் கருப்பு கொடி ஏந்தி தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
விழுப்புரம் திமுக எம்எல்ஏ லட்சுமணன் தனது ஆதரவாளர்களுடன் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வன்னிவேடு கிராமத்தில் திமுக மகளிரணியினர், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து மதுரையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
விருகம்பாக்கம் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா, ஆதரவாளர்களுடன் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications