ஓடிடி பிரியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. வெளியாகிறது 'துரந்தர் 2'.. எதில்? எப்போது? பார்க்கலாம்!
ஓடிடி பிரியர்கள் அதிகம் எதிர்பார்த்த 'துரந்தர் 2' திரைப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. எப்போது எதில் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டயோர் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த பான் இந்தியா திரைப்படம் 'துரந்தர்'.
பெரும் எதிர்பார்ப்புடன் உலகம் முழுவதும் ரிலீசான துரந்தர், விமர்சனத்திலும், வசூலிலும் மாபெரும் வரவேற்பு பெற்றது. பாகிஸ்தானில் உள்ள இந்திய உளவாளி பற்றிய ஸ்பை, திரில்லர் திரைப்படமாகும். அமோக வரவேற்பு பெற்ற இப்படம் உலகளவில் சுமார் 1350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 'துரந்தர் தி ரிவெஞ்' என்ற பெயரில் இரண்டாவது பாகம் பான் இந்தியா அளவில் ரிலீசானது. முதல் பாகம் கொடுத்த எதிர்பார்ப்பை விட இரண்டாம் பாகம் பயங்கரமான எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 19ம் தேதி உலகளவில் ரிலீசானது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகத்திலும் அதே உளவாளியாக ரன்வீர் சிங் நடித்து மாஸ் காட்டியுள்ளார். 3 மணிநேரம் 49 நிமிடங்கள் என நீண்ட டைமிங் இருப்பினும் படம் கொஞ்சமும் சலிப்பூட்டாமல் விறுவிறுப்பு காட்டி அதிகப்படியான ஆடியன்ஸை ஈர்த்தது.
முதல் பாகத்தை விட அதிக வரவேற்பு பெற்ற இரண்டாவது பாகம் சுமார் 1,700 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே அதிகம் வசூல் செய்த இரண்டாவது பெரிய படம் என்ற பெருமைக்கு சொந்தமானது.
இந்த நிலையில் துரந்தர் 2 எப்போ ஓடிடியில் ரிலீஸாகும் என்பதே ஓடிடி பிரியர்களின் கேள்வியாக இருந்தது. அதன்படி துரந்தர் 2 வரும் மே 14ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications