பகத் பாசில் வைத்திருக்கும் கார்கள்.. என்னென்ன? அம்பானிக்கே டஃப் கொடுப்பாரு போலயே? ஆச்சரியமூட்டும் விலை பட்டியல்!
தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ஸ்டார் நடிகராக ஜொலித்து வருபவர் பகத் பாசில். நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். எதார்த்தமான நடிப்புக்கு பெயர்போனவர். இந்தியளவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர், மிக பெரிய கார் பெரியார் என்பது பலருக்கும் தெரியாது. அதன்படி இவர் வைத்திருக்கும் கார்கள் என்னென்ன? இவர் கலெக்ஷனில் புதிதாக இணைந்த கார் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நடிகர் பகத் பாசில், போர்ச்சே 911 மாடல் கார் வைத்துள்ளார். அதன் விலை சுமார் 1.8 கோடி ரூபாய் ஆகும்.
ரேன்ஞ் ரோவர் ஆட்டோ பயோகிராபி மாடல் காரை பகத் பாசில் பயன்படுத்தி வருகிறார். சொகுசு காரான இந்த காரின் விலை சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஜி63 ஏ.எம்.ஜி மாடல் காரை பகத் பாசில் பயன்படுத்தி வருகிறார். அதன் விலை சுமார் 4 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியளவில் மிகவும் பிரபலமான லேண்ட்ரோவர் டிபன்டர் காரை பகத் பாசில் பயன்படுத்தி வருகிறார். அதன் விலை சுமார் 2.12 கோடி ரூபாய் ஆகும்.
நடிகர் பகத் பாசில், லம்போர்கினி உருஸ் காரை தனது கலெக்ஷனில் வைத்துள்ளார். அதன் விலை சுமார் 3.15 கோடி ரூபாய் வரை இருக்கும்.
Lexus LM 350h மாடல் காரை பயன்படுத்தி வருகிறார் பகத் பாசில். அதன் விலை சுமார் 2.6 கோடி ரூபாய் வரை இருக்கும்.
பகத் பாசில், தனது கலெக்ஷனில் வோக்ஸ்வாகன் கோல்ஃப் ஜிடிஐ கார் வைத்துள்ளார். அதன் விலை சுமார் 53 லட்சம் ரூபாய் இருக்கும்.
இவரது கார் கலெக்ஷனில் தற்போது புதிய கார் ஒன்று இணைந்துள்ளது. ஃபெராரி நிறுவனத்தை சேர்ந்த புரோசாங்கு மாடல் காரை வாங்கியுள்ளார். அந்த காரின் விலை சுமார் 13.75 கோடி ரூபாய் ஆகும். இந்தியளவில் குறைவான நபர்கள் மட்டுமே இந்த காரை வைத்துள்ளனர். குறிப்பாக முகேஷ் அம்பானி, விக்ரம் ஆகியோரிடம் இந்த கார் உள்ளது.


Click it and Unblock the Notifications