கரூரில் உள்ள ஃபேமஸ் இடங்கள் என்னென்ன? சுற்றிப்பார்க்க என்னவெல்லாம் இருக்கு?
கரூரில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்கள், ஆன்மிக ஸ்தலங்கள், வரலாற்று நினைவுகள் என்னென்ன உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இந்த லாங் வீக் எண்டில் எங்கெல்லாம் சென்று சுற்றிப்பார்க்கலாம் என்பதை பார்ப்போம்.
பொன்னணியாறு அணை: சுற்றிலும் மலை, சுமையான இயற்கையின் அழகை கண்டு ரசிக்க ஏற்ற இடமாகும். குடும்பத்துடனும், காதலர்களுக்கும் நேரத்தை செலவிட ஏற்ற இடமாகும்.
அரசு அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆர்வலர்கள், வரலாற்றை தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் பார்க்கவேண்டிய இடமாகும். சோழர்கள் பயன்படுத்திய பொருட்களை அங்கு பார்க்கலாம்.
மாயனூர் செக் அணை: மைண்ட் ரிலாக்ஸ் செய்யவும், பல வித பறவைகளை காணவும் மாயனூர் செக் அணைக்கு ஒரு விசிட் போடுங்க.
கல்யாண வெங்கடரமன கோவில்: விஷ்ணுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். மன நிம்மதியும், வாழ்வில் ஏற்படும் குழப்பங்களை தீர்க்கவும் இந்த கோவிலுக்கு பக்தர்கள் பலர் வழிபாடு செய்வது வழக்கம்.
ரத்தினகிரீஸ்வரர் கோவில்: சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவில் கோவில் அய்யர்மலையில் அமைத்துள்ளது. மலை மேல் இருந்து கரூர் ஊரின் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.
பசுபதீஸ்வரர் கோவில்: கரூரில் உள்ள முக்கிய இடமாக பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இவ்வளவு ஏன் கரூரின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பணக்கஷ்டம் தீர செல்வம் பெருக இந்த கோவிலில் வழிபாடு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications