Home / Photos
PHOTOS : யப்பா.. இவ்வளவு கோடியா..! கால்பந்து போட்டியில் ஜெயிக்கும் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?
By Chandru
உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கால்பந்து விளையாட்டு போட்டி இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இணையாக கால்பந்து விளையாட்டு போட்டி இருக்கின்றது. குறிப்பாக கேரளாவில் அதிகளவு கால்பந்து பிரியர்கள் இருக்கின்றனர்.
1/10
Photo Credit: mykhel
Share
உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக கால்பந்து விளையாட்டு போட்டி இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இணையாக கால்பந்து விளையாட்டு போட்டி இருக்கின்றது. குறிப்பாக கேரளாவில் அதிகளவு கால்பந்து பிரியர்கள் இருக்கின்றனர்.
2/10
Photo Credit: mykhel
Share
அந்தவகையில் இந்த ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்றது. இதற்கு முன் ரஷ்யாவில் 2018 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. உலகநாடுகளின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு கத்தார் மிக பிரம்மாண்டமாக ஃபிஃபா கால்பந்து போட்டியை நடத்தியது.
3/10
Photo Credit: mykhel
Share
ஃபிஃபா கால்பந்து அமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நிலையில் இந்த வருடம் மிகவும் எதிர்பார்ப்புடன் மிக பிரம்மாண்டமாக ஃபிஃபா கால்பந்து போட்டி தொடங்கியது.
4/10
Photo Credit: mykhel
Share
நவம்பர் 4 தேதி தேதி கத்தாரில் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் உலகம் முழுவதும் உள்ள சுமார் 32 கால்பந்து அணிகள் பங்குபெற்றன. 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, அதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.
5/10
Photo Credit: mykhel
Share
இத்தாலி, ஸ்வீடன், உக்ரைன், நைஜீரிய, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல அணிகளில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டியில் பங்குபெறவில்லை இதில் இந்திய அணியும் பங்குபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6/10
Photo Credit: mykhel
Share
இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு ஃபிஃபா அமைப்பு குறிப்பிட்ட தொகையை பரிசாக அளிக்கும்.இந்தவகையில் இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் எந்தெந்த அணிகள் எவ்வளவு பரிசு தொகை பெறுகின்றன என்பதை பார்ப்போம் :
7/10
Photo Credit: mykhel
Share
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றது. 32 ஆண்டுகளுக்கு பின் அர்ஜென்டினா அணி சாம்பியன் படத்தை வென்றுள்ளது. வெற்றி கனியை பறித்த அர்ஜென்டினா அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 344 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஃபிஃபா வழங்கவுள்ளது.
8/10
Photo Credit: mykhel
Share
இரண்டாம் இடத்தில் அர்ஜென்டினா அணியுடன் போராடி தோற்ற பிரான்ஸ் அணி உள்ளது. வெற்றி கனியை நூலிழையில் நழுவவிட்ட பிரான்ஸ் அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 245 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஃபிஃபா வழங்கவுள்ளது.
9/10
Photo Credit: mykhel
Share
மூன்றாம் இடத்தில் குரேஷியா கால்பந்து அணி உள்ளது. குரேஷிய அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 220 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஃபிஃபா வழங்கவுள்ளது. மேலும் நான்காவது இடத்தில் மொராக்கோ அணி உள்ளது. மொராக்கோ அணிக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 204 கோடி ரூபாய் பரிசு தொகையாக ஃபிஃபா வழங்கவுள்ளது.


Click it and Unblock the Notifications