Home / Photos
வெள்ளை முடியை கருமையாக்க இந்த 7 உணவுகள் போதுமா? சூப்பர் டிப்ஸ் இதோ!
By Divya Bala
நம்மில் பலருக்கும் இளநரை பற்றிய கவலை இல்லாமல் இருப்பதில்லை. அதை எப்படி போக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
1/8
Share
இளநரை அல்லது வெள்ளைமுடி இது சில சமயங்களில் நமது நம்பிக்கையை உடைக்கவும் செய்யும். நம்மால் தைரியமாக வெளியில் டை அல்லது கலரிங் செய்யாமல் வெளியில் செல்ல முடியாது. இனி கவலை வேண்டாம் இந்த சூப்பர் உணவுகள் உங்களை இளநரையில் இருந்து காப்பாற்றும்.
2/8
Share
முட்டை: முட்டையில் கால்சியம் சாது அதிகளவில் இருக்கிறது என்பது தெரிந்த ஒன்றே. இதில் இருக்கும் பி12 என்ற ஊட்டச்சத்து முடியை இளநரையில் இருந்து காக்கிறது. மேலும் முட்டையின் வெள்ளை கருவே இதற்கு அதிகம் உதவுவதால் வேகவைத்து சாப்பிடுவது நல்லது.
3/8
Share
பச்சை இலை காய்கறிகள்: பொதுவாக நாம் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்த ஒன்று என்னவென்றால் கீரையில் அதிகப்படியான இரும்பு சத்துக்கள் உள்ளன. மேலும் கால்சியம், விட்டமின்கள் நிறைந்துள்ளதால் இவை முடியை கருமையாக அடர்த்தியாக வைத்திருக்க உதவுகின்றன.
4/8
Share
டார்க் சாக்லேட்: இது முழுவதுமான ஒரு ஆன்டி ஆக்ஸிடென்ட் நமது உடலுக்கு உதவுகிறது. இதில் இருக்கும் காப்பர் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவியாக இருக்கின்றன. முக்கியமாக மெலனின் உற்பத்தியை பாதுகாக்கின்றன. இதனால் இளநரை வராமல் தடுக்க முடியும்.
5/8
Share
பருப்பு வகைகள்: ப்ரோடீன் என்றாலே அதிகம் இந்த பருப்புகளில் இருந்துதான் நமக்கு கிடைக்கின்றன. இதில் இருக்கும் பி9 ஊட்டச்சத்து முடியை ஆரோக்கியமாக வளர்வதற்கு உறுதுணையாக உள்ளன. மேலும் தினமும் இவற்றை உணவில் சேர்ப்பதால் நல்ல அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
6/8
Share
பால் சார்ந்த பொருட்கள்: பால், தயிர், சீஸ், பன்னீர் என பாலில் இருந்து கிடைக்கும் பொருட்களில் கால்சியம் மட்டுமில்லாமல் பி 12 என்ற ஊட்டச்சத்தும் உள்ளது. இது மெலனின் உருவாக அதிக அளவு உதவி செய்வதால் இளநரையில் இருந்து தப்பிக்கலாம்.
7/8
Share
காளான்: இவை மெலனின் அதிக அளவில் உற்பத்தியாக உதவுகின்றன. ஆகையால் முடி எளிதில் வெள்ளையாக மாறாது. மேலும் நமது தோலின் நிறத்தை இவைதான் பாதுகாக்கின்றன.
8/8
Share
சோயா பீன்ஸ்: அதிக அளவு ப்ரோடீன் நிறைந்துள்ள உணவு என்றால் அது சோயா பீன்ஸ் தான். அதுவும் இவற்றை டயட்டில் மக்கள் பெருமபாலும் எடுத்துக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு இதில் சத்துக்கள் உள்ளன. இது இளநரை வர விடாமல் தடுக்கின்றன.


Click it and Unblock the Notifications