சிவப்பு நிற பீட்ரூட்டும்.. அது தரும் சூப்பரான நன்மைகளும்.. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கோங்க
கொஞ்சம் இனிப்பு சுவை கொண்ட பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன. இதனை கேரட்டை போல் சமைக்காமல் பச்சையாக சாப்பிடலாமா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பீட்ரூட் என்றவுடன் முதலில் நியாபகம் வருவது ABC ஜூஸ் தான்.. உடல் எடை குறைக்க, சருமம் பொலிவு பெற ABC ஜூஸ் உதவும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் ABC ஜூஸ் உடல் எடை குறைக்க உதவாது. அதில் உள்ள சர்க்கரை நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தும். இதனால் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த ஜூஸை தவிர்ப்பது நல்லது. மேலும் மற்றவர்கள் தினமும் எடுத்துக்கொள்ளாமல் வாரத்துக்கு இரண்டு முறை எடுத்துக்கொண்டால் போதுமானது என கூறுகின்றனர்.
சர்க்கரை நோயாளி, சிறுநீரக கோளாறு, செரிமான பிரச்னை உள்ளவர்கள் பீட்ரூட்டை தவிர்ப்பது நல்லது.
பீட்ரூட்டை தினமும் நம் டயட்டில் எடுத்துக்கொள்ளாமல் வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை எடுத்துக்கொண்டால் போதுமானது. அதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் இதன் மூலம் கிடைக்கும்.
கேரட்டை போல் பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். பச்சையாக சாப்பிடுவதால் அது செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் அதில் இருந்து கிடைக்கும் சத்துக்கள் ஒன்றும் கிடைக்காது. பீட்ரூட்டை வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
பொட்டாசியம் சத்து அதிகமுள்ள காய்கறி பீட்ரூட். இவை இதய ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
பீட்ரூட் ஜூஸை தினமும் எடுத்துக்கொண்டால் சருமம் பொலிவு பெரும். இதனை அரைத்து முகத்தில் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க பீட்ரூட் உதவுகிறது.


Click it and Unblock the Notifications