Home / Photos
தினமும் பழைய சோறு சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? தெரிஞ்சுக்கோங்க!
By Divya Bala
நாம் நினைத்தவுடன் சாப்பிடும் உணவை போல் அல்ல இந்த பழைய சோறு. ஒருநாள் முன்பு மீதம் வந்த சோறில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அதில் உப்பிட்டு கரைத்து குடிக்க வேண்டும். ஒருநாள் காத்திருந்து சாப்பிடுவதால் இதில் அத்தனை சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
1/7
Share
நாம் நினைத்தவுடன் சாப்பிடும் உணவை போல் அல்ல இந்த பழைய சோறு. ஒருநாள் முன்பு மீதம் வந்த சோறில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் அதில் உப்பிட்டு கரைத்து குடிக்க வேண்டும். ஒருநாள் காத்திருந்து சாப்பிடுவதால் இதில் அத்தனை சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன.
2/7
Share
பழைய சோறில் சிறிது மோர் அல்லது தயிர் கலந்து சிறிது வெங்காயம், மிளகாய், வத்தல், கருவாடு, ஊறுகாய் என வைத்து சாப்பிட்டால் வேற லெவெலில் இருக்கும். வைட்டமின் பி6 மற்றும் பி12 ஊட்டச்சத்து இருக்கிறது. இது வேறெந்த உணவிலும் இல்லை.
3/7
Share
பழைய சோறை முன்தினமே நீர் ஊற்றி செய்வதால் பல லட்சக்கணக்கான நல்ல பாக்ட்ரியாக்கள் உருவாகின்றன. இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்கி செரிமான மண்டலம் நன்றாக செயல் படும். காலையில் இந்த நீராகத்தை குடிப்பதால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
4/7
Share
பழையசோற்றில் இருக்கும் நல்ல பாக்ட்ரியாக்கள், உடலை தாக்கும் நோய் கிருமிகளை எதிர்த்து சண்டை இடுகின்றன. இதனால் உடல் உள்ளுறுப்புகள் பாதுகாக்க படுகின்றன. உடலில் ஏற்படும் பிரச்சனைகள் தடுத்து நோய் எதிர்ப்புக்கு உதவுகின்றன.
5/7
Share
நம் முன்னோர்கள் வயல் வெளிகளில் கடுமையான வேலை செய்தார்கள். அவர்களுக்கு காலை உணவு மலை உணவாக இந்த பழைய சோறுதான் இருந்திருக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள், இளமையாக வைத்திருக்க உதவுகின்றன.
6/7
Share
பழைய சோற்றில் இருக்கும் சத்துக்களால் எலும்புகள் வலுவடையும். மேலும் காலையில் இதை அருந்துவதால் உடலில் இருக்கும் சூடு தணிக்கப்படுகிறது. இந்த பழைய சோறுக்கு முக்கியமாக, சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி போன்றவற்றில் செய்தால் இன்னும் ருசியாக இருக்கும்.
7/7
Share
காலையில் பழைய சோறு சாப்பிடுவதால் அன்று ஆரம்பிக்கும்போதே சுறுசுறுப்பாக இருக்கும். இந்த பழைய சோறு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முக்கியமாக இதில் இருக்கும் பாக்ட்ரியாக்கள் அல்சர் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.


Click it and Unblock the Notifications