Home / Photos
தொடர்ந்து ஜிம்முக்கு சென்றுவிட்டு.. திடீரென நின்றுவிட்டால் என்னாகும்? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
By Chandru
ஜிம்முக்கு சென்று வொர்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் இளைஞர்களுக்கு ஜிம்முக்கு செல்வது ஒரு பெஷனாக பார்க்கப்படுகிறது. வொர்கவுட் செய்யுறோமோ இல்லையோ காலை எழுந்தவுடன் ஜிம்முக்கு போயிட்டுவரேன் என்று சொல்வது தனி கெத்துதான். இப்படியாக ஒரு வேகத்தில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்துவிட்டு பின்னர் திடீரென நிறுத்தினால் உடலுக்குள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
ஜிம் சென்ற புதுசில் ஆர்வக்கோளாறில் பலவிதமான உடற்பயிற்சியை செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் இறுகி வலுவாகும். தசைகளில் மாற்றம் ஏற்படும். தொடர்ந்து ஜிம் சென்றுவிட்டு ஒருகட்டத்தில் போதும் என நிறுத்திவிட்டால், அது இறுக்கமான தசைகளை வலுவிழக்க செய்துவிடும், தசைகளில் வலி ஏற்படும்.
2/5
Share
ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது அதிகளவு வியர்வை வெளியேறும். இது உங்களின் பாசிட்டிவ் ஹார்மோன்ஸை அதிகப்படுத்தி நீங்களே உங்களை கிரேட் என்று நினைக்க தூண்டும். திடீரென ஜிம்மிக்கு செல்வதை நிறுத்திவிட்டால் வியர்வை வருவது குறைந்துவிடும், நீங்களே உங்களை நெகட்டிவாக உணருவீர்கள்.
3/5
Share
ஜிம் செல்லும்போது உணவு கட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். அதுவே திடீரென ஜிம் செல்வதை நிறுத்திவிட்டால் உணவின் மீதான ஆர்வம் அதிகரித்து அதிகம் சாப்பிடுவீர்கள். இதனால் உடலில் கொழுப்பு படிந்து உடலின் எடை அதிகரிக்கும்.
4/5
Share
ஜிம் செல்வதன் மூலம் ஹாப்பி ஹார்மோன்ஸ் தூண்டப்பட்டு நாள் முழுவதும் மகிழ்ச்சியாக, புத்துணர்ச்சியாக உணருவீர்கள். அதுவே ஜிம் செல்வதை நிறுத்திவிட்டால் எதோ ஒன்னு குறையாக இருப்பது போல் உணருவீர்கள்.
5/5
Share
ஜிம்மிக்கு சென்றுவிட்டு திடீரென நிறுத்திவிட்டால் உடல் எடை கூடும் என்பது பொய்யான தகவல். ஆனால் இதில் ஒரு உண்மையும் உண்டு. ஜிம்மிக்கு செல்லும்போது டயட்டில் இருந்துவிட்டு பின்னர் டயட்டை கைவிட்டால் உடல் எடை கூடத்தான செய்யும்.


Click it and Unblock the Notifications