Home / Photos
PHOTOS: எத்தனை சீரியல்.. எத்தனை படங்கள்.. ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் பிரபல நடிகையாம்! பாத்தீங்களா?
By Chandru
redin kingsley wife Sangeetha Venkatesh acted in many films and tv serials. check out here is the full details about redin kingsley wife Sangeetha Venkatesh
1/9
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லி பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமணம் செய்துகொண்டார். தற்போது சங்கீதா யார் எந்தென சீரியல், படங்களில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2/9
Photo Credit: instagram
Share
1998 ஆம் ஆண்டு நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான 'அவள் வருவாளா' என்ற படத்தில் 'ருக்கு ருக்கு ருக்கு மணி' என்ற பாடலுக்கு குரூப் டான்சரில் ஒருவகாரக நடனம் ஆடி தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் ரெடின் கிங்ஸ்லி.
3/9
Photo Credit: instagram
Share
அப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடந்து எல்.கே.ஜி., குர்கா, சந்தானத்தின் ஏ1, ஜாக்ப்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்.
4/9
Photo Credit: instagram
Share
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படம் தான் ரெடின் கிங்ஸ்லியை மிகவும் பிரபலமாகியது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது காமெடி சென்ஸ் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ஆடியன்ஸின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.
5/9
Photo Credit: instagram
Share
டாக்டர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரெடின் கிங்ஸ்லிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிடர்ன்ஸ், சந்தானத்துடன் டிடி ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து பிஸி நடிகராக பல ஹிட் படங்களில் காமெடியில் கலக்கி வருகிறார்.
6/9
Photo Credit: instagram
Share
சமீபத்தில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்து தனது சரவெடி காமெடியினால் மக்களை சிரிக்காவைத்தார் ரெடின் கிங்ஸ்லி. இந்த நிலையில் நேற்று தனது நீண்ட நாள் காதலியான பிரபல சீரியல் நடிகை சங்கீதாவை காதல் திருமண செய்துகொண்டார்.
7/9
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சங்கீதா. அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம், எங்க வீட்டு மீனாக்க்ஷி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
8/9
Photo Credit: instagram
Share
வீட்டுல விசேஷம், விசித்திரன், ஹே சினாமிகா, சுல்தான், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, மாஸ்டர், செவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக சங்கீதா வலம் வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
இந்த நிலையில் மிகவும் எளிமையாக நடந்து முடிந்துள்ள ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் சங்கீதாவின் இன்ஸ்டாகிராம் புகைப்படத்தையும் அதிகமானோர் ஃபாலோ செய்ய தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications