காட்டுக்குள் ட்ரிப் போன நண்பர்கள்.. அண்டர்கிரௌண்டில் தான் ட்விஸ்ட்டே.. ஹாரர்க்கு பஞ்சம் இல்லாத இந்த படத்தை பார்த்திருக்கீங்களா?
2011ல் வெளியான தி கேபின் இன் தி வூட்ஸ் என்ற இந்த படம் ட்ரெவ் இயக்கியுள்ளார். படம் த்ரில்லிங்கிற்கு பஞ்சம் இல்லாத வகையில் பதைபதைக்கும் காட்சிகளுடன் இந்த படம் வேற லெவல் அனுபவத்தை கொடுக்கும்.
முதல் காட்சியில் ஒரு பெரிய அலுவலகத்தில் சிலர் பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருப்பார்கள். அப்படியே படம் ஆரம்பிக்க, 5 நண்பர்கள் ஒன்றாக இணைந்து காட்டுக்குள் இருக்கும் ஒரு மர வீட்டிற்கு செல்ல தயாராகிறார்கள். அவர்கள் ஒரு வேனில் கிளம்பி செல்ல போகும் வழியில் ஒரு பழைய பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட அங்கிருந்து வந்த ஒருவன் இவர்களை ஏளனமாக கேலி செய்ய அங்கிருந்து கிளம்பி அவர்கள் போகும் இடத்திற்கு செல்கிறார்கள்.
டானா, ஹோல்டன் வண்டியில் ஏறி தப்பிக்க ஹோல்டனை ஒரு பேய் கொடூரமாக கொல்கிறது. வண்டி அந்த ஏரியில் கவிழ, டானா தப்பித்தோம் என நினைப்பதற்குள் இன்னொரு பேய் அவளை தூக்கி போட்டு பந்தாடுகிறது. டார்கெட் அச்சீவ் என இந்த கும்பல் கொண்டாட, அப்படியே வேறு நாடுகளிலும் இவர்கள் இதைத்தான் செய்கிறார்கள் என ஒரு காட்சியை காண்பிப்பார்கள். அது பயங்கர கொடூரமாக இருக்கும். அதற்குள் டானவை காப்பாற்ற மார்ட்டி அங்கு வர இருவரும் அந்த வீட்டின் பேஸ்மெண்ட் வழியாக ஒரு லிப்ட்டில் செல்வார்கள்.
அந்த லிப்ட் கீழே இறங்க இறங்க வரும் பாருங்க ஒரு காட்சி அப்படியே என்னடா இதுன்னு இருக்கும். இதை லாங் ஷாட்டில் மொத்தமாக காண்பிக்க அந்த லிப்ட் காட்சி வேற லெவெலில் இருக்கும். இவர்களை பிடிக்க ஒருவன் வர அவனை அடித்து அங்கிருந்து தப்பிக்க ஒழுங்காக சரணடைய சொல்லி மைக்கில் சொல்ல இவர்கள் ஒரு அறையில் ஒளிந்து கொள்ள , இவர்களை பிடிக்க 10 பேர் வரவும், மற்ற லிப்ட்டை திறந்து விடுகிறார்கள். அவ்வளவுதான் இவர்கள் உருவாக்கிய அந்த வினோத ஜந்துக்கள், ஸோம்பிகள் என அனைத்தும் வெளியில் வரும்.
இருவரும் அங்கிருந்த சில கல்வெட்டுகளை பார்த்து இது ஏதோ சடங்கு போல என பேச ஒரு பெண் வந்து ஆமாம், உலகத்தை காப்பாற்றுவதற்காக இந்த பலியை நாங்கள் கொடுக்கிறோம் என சொல்லுவாள். அதற்கு என் நண்பர்கள் தான் கிடைத்தார்களா என மார்ட்டி கேட்க, அவனை கொன்றால் நீ உயிர் வாழலாம் என சொல்ல டாணாவிடம் சொல்வாள். டானா துப்பாக்கியை எடுத்து மார்டியை குறிவைப்பாள். அதற்குள் ஒரு ஓநாய் டானவை கொடூரமாக தாக்க, மார்டி அந்த பெண்ணை அருகில் இருந்த குழியில் தள்ள எப்படியும் உலகம் அழிய போகிறது என இருவரும் சிரிக்க ஒரு பெரிய கை அந்த உள்ளிருந்து வெளியே வர மொத்தமாக அந்த மர வீடு சுக்கு நூறாகிறது. இந்த படம் அமேசான் பிரைமில் ஆங்கிலத்தில் காணலாம். ரத்தம் நிறைந்த காட்சிகள், 18+ காட்சிகள் இருப்பதால் குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கலாம்.


Click it and Unblock the Notifications