இந்தியா: கடந்த மார்ச் மாதம்.. எந்தெந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது? எவ்வளவு? பட்டியல்!
வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழல் இந்தியா, கடந்த மார்ச் மாதம் எந்தெந்த நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது? எதனை பேரல்கள் இறக்குமதி செய்தது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
போர் சூழலுக்கு இடையே இந்தியா, கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து சுமார் 106.52 டாலர் மதிப்புடைய 2 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ஈராக் நாட்டிடம் இருந்து சுமார் 119.55 டாலர் மதிப்புடைய 2 லட்சத்து 35 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் அங்கோலா நாட்டிடம் இருந்து சுமார் 115.74 டாலர் மதிப்புடைய 3 லட்சத்து 27 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் சவுதி அரேபியா நாட்டிடம் இருந்து சுமார் 114.48 டாலர் மதிப்புடைய 5 லட்சத்து 72 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யா நாட்டிடம் இருந்து சுமார் 121.78 டாலர் மதிப்புடைய 19 லட்சத்து 75 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிற நாடுகளை விட ரஷ்யாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications