Home / Photos
சஞ்சு சாம்சனின் ருத்ரதாண்டவம்.. மும்பை அணியை பந்தாடிய சிஎஸ்கே.. போட்டோஸ்!
By Chandru
மும்பை இந்தியன்ஸ் அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது.
1/10
Photo Credit: PTI
Share
நேற்று, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை அணி மோதிக்கொண்டன. டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்க்ஸை சென்னை அணி விளையாடியது.
2/10
Photo Credit: PTI
Share
சென்னை அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சஞ்சு சாம்சன் மிரட்டலாக விளையாடி மும்பை அணி பந்துவீச்சாளர்களை கதறவிட்டுள்ளார்.
3/10
Photo Credit: PTI
Share
மைதானத்தின் நாலாபுறமும் பந்தை பறக்கவிட்ட சஞ்சு 54 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து இறுதி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த சீசனின் இரண்டாவது சத்தத்தை பதிவு செய்தார்.
4/10
Photo Credit: PTI
Share
தொடர்ந்து களமிறங்குய சென்னை அணி வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். சர்பராஸ் கான் 14 ரன்கள், ஷிவம் துபே 5 ரன், டெவால்ட் ப்ரீவிஸ் 21 ரன்கள், கார்த்திக் சர்மா 18 ரன்கள் என அணியின் மொத்த ஸ்கோர் 207 ஆக இருந்தது.
5/10
Photo Credit: PTI
Share
சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. 208 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ஓப்பனிங் இறங்கிய குயின்டன் டி காக் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய டேனிஷ் மாலேவார், நமன் திர் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தனர்.
6/10
Photo Credit: PTI
Share
பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிறகு வெறும் 23 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்திருந்தது. திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் சிறிது நேரம் அணிக்காக ரன் எடுக்க போராடினர். பின்னர் அகேல் ஹொசைன் பந்தில் இருவரும் சுருண்டனர்.
7/10
Photo Credit: PTI
Share
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது.
8/10
Photo Credit: PTI
Share
104 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி சென்னை அணியிடம் படுதோல்வியடைந்தது.
9/10
Photo Credit: PTI
Share
அசத்தல் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 5ம் இடத்திற்கு முன்னேறியது.


Click it and Unblock the Notifications