OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, ஆஹா ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, ஆஹா ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2019ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் சைக்கலாஜிக்கல் திரில்லர் ட்ராமா வெப் தொடர் 'Euphoria'. இத்தொடரின் 3வது சீசன் கடந்த 13ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
மராத்தியில் உருவாகியுள்ள ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Rubaab'. இப்படம் கடந்த 14ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசானது.
மலையாளத்தில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Sambhavam Adhyayam Onnu'. இப்படம் நேற்று 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
உலக பிரபலமான ஹாரி பாட்டர் திரைப்படம் எப்படி உருவானது என்பதை பற்றிய டாக்குமெண்டரி திரைப்படம் 'Finding Harry: The Craft Behind the Magic'. இப்படம் நேற்று 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
பெங்காலியில் வெளிவந்த காமெடி, ஹாரர் திரைப்படம் 'Bhanupriya Bhooter Hotel'. திகில் நிறைந்த இப்படம் நேற்று 15ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசானது.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படம் 'Aa Gang Repu 3'. இப்படம் இன்று 16ம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கி வெளிவந்த திரில்லர் திரைப்படம் 'Pochamma'. இப்படம் நாளை 17ம் தேதி ஆஹா ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications