OTT: ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி ரிலீஸ்.. இந்த வாரம் என்னென்ன படம் பார்க்கலாம்?
இந்த வாரம் ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி, ஃபீல் குட் வெப் தொடர் 'BatchMates'. இத்தொடர் இன்று 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், ஃபேண்டஸி திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. இப்படம் நாளை 1ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'Aadu 3'. இப்படம் நாளை 1ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
ஹிந்தியில் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'The Kerala Story 2 Goes Beyond'. இப்படம் நாளை 1ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ளது.
2020ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் க்ரைம் ஹிந்தி வெப் தொடர் 'Undekhi'. இத்தொடரின் நான்காவது சீசன் நாளை 1ம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications