வாழ்க்கை துணை.. மாதம்பட்டி ரங்கராஜ் முத்தமிடும் புகைப்படங்களை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!
மாதம்பட்டி ரங்கராஜ்- ஜாய் கிரிசில்டா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வெளியாகியுள்ளது.
நடிகன்: 2019ல் வெளிவந்த 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமானார். அதனை தொடர்ந்து 2020ல் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த 'பென்குயின்' படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன்பின்னர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை. தனது முழு கவனத்தையும் பிசினஸ் பக்கம் திருப்பினார்.
சமையல் கலைஞர்: நடிகராக என்ட்ரி கொடுப்பதற்கு முன் பிரபல சமையல் கலைஞராக வலம் வந்தவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். படங்களில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக்கொண்டார். தனது அப்பாவின் பிசினஸை கையில் எடுத்த இவர், புது புது ஐடியாக்களை உருவாக்கி சமையல் துறையில் தனக்கென மிக பெரிய அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பிரபல சமையல் கேட்டரிங் நிறுவனமாக மாதம்பட்டி ரங்கராஜன் கேட்டரிங் உள்ளது.
சின்னத்திரை: பெரிய பெரிய தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் என அனைவரின் வீட்டு விசேஷங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜன் சமையல் தான் வேண்டும் என்று தேடி வருவார்களாம். இப்படி சமையல் துறையில் பாப்புலராக இருந்து இவர், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக என்ட்ரி கொடுத்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். அதனுடன் இவரின் இரண்டாவது திருமண பிரச்னையும் வெடித்தது.
இரண்டாவது திருமணம்: ஏற்கனவே தனது மாமன் மகளை திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், விவாகரத்து செய்துகொள்ளாமலேயே ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டதாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது.
கர்ப்பம்: ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அதற்கு காரணமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றுவதாகவும் பரபரப்பு புகார் அளித்தார். சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மேலும் அடுத்தடுத்து இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கேட்டரிங் நிறுவனத்திற்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக ஜாய் கிரிசில்டா மீது குற்றம்சாட்டியுள்ளார்.
முத்தமழை: மாதம்பட்டி ரங்கராஜ் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் ஜாய் கிரிசில்டாவும் ரங்கராஜும் ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஜாய் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது "வாழ்க்கை துணை" என்ற வாசகத்துடன் இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிந்துள்ளார். அதில், ஜாய் கிரிசில்டாவுக்கு மாதம்படி ரங்கராஜ் முத்தம் கொடுப்பது போலவும், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து அடுக்கடுக்கான ஆதாரங்களை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது இந்த போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாக வலம் வர தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications