OTT: தரமான திரில்லர் கலந்த காமெடி வெப் தொடர்.. போலீசை கதறவிடும் மர்ம திருடனின் கதை.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஓடிடியில் வெளியான காக்கி சர்கஸ் வெப் தொடரின் விமர்சனம்? இந்த வீக் எண்டு எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
படக்குழு: இயக்குநர் அமீன் பாரிப் இயக்கத்தில் முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'காக்கி சர்கஸ்'. சுபாஷ் செல்வம், ராஜேஷ் மாதவன், கவுதமி நாயர், வின்சு ரேச், அப்துல் லீ உட்பட பலர் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
முனிஷ்காந்த்: சமீபத்தில் ரிலீசான, இனி ரிலீஸாகவுள்ள தமிழ் படங்களில் பெரும்பாலான படங்களில் முனிஷ்காந்தை பார்க்கலாம். மிக முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மனம் கவர்ந்து வருகிறார். குறிப்பாக தாய் கிழவி படத்தில் வரும் முனிஷ்காந்தின் 'பென்னி குயிக்' கதாபாத்திரம் அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 'காக்கி சர்கஸ்' வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
கதை: கடற்கரை நகரில் இருக்கும் சப் ஜெயிலில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெறுகிறது. அந்த ஜெயிலுக்குள் சின்ன கோவில் ஒன்று உண்டு. அதேபோல் சின்ன உண்டியலும் உண்டு. இரண்டும் தடுப்பு கம்பி போட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. ஜெயிலில் இருக்கும் போலீசாருக்கு விருப்பமான வழிபாடு கோவிலாக உள்ளது. காவலர்கள் தினந்தோறும் கோவில் உண்டியலில் காசு போடுவது வழக்கம்.
அப்படியாக உண்டியலில் அதிகமாக காசு சேர்ந்து கனத்துடம் காணப்படுகிறது. ஒரு நாள் காவலர் ஒருவர் உண்டியலில் காசு போடுகிறார், "டொயிங்" என பாத்திரத்தின் சத்தம் கேட்கிறது. பாதுகாக்கப்பட்ட உண்டியலில் உள்ள காசுகள் திருடுபோனது தெரியவந்துள்ளது. ஜெயிலுக்குல்லேயே கொள்ளை சம்பவமா என காவலர்கள் விழிபிதிங்கி போயினர். யார் திருடியது? என்பதே இத்தொடரின் கலக்கலான காமெடி நிறைந்த த்ரில் கதைக்களம்.
புலனாய்வு சம்பவங்கள், குழப்பங்கள், கொள்ளை சம்பவம் பற்றி தெரியாமல் சிக்கிக்கொள்ளும் கைதிகள் என தொடர் விறுவிறுப்புக்கும், சிரிப்புக்கும் பஞ்சம் இல்லாமல் உள்ளது.
எந்த ஓடிடி? கலக்கலான இந்த வெப் தொடர் கடந்த 10ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசானது. இந்த வீக் எண்டு இத்தொடரை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications