Home / Photos
PHOTOS : என்னோட சீன் வெறும் 18 நிமிடம் தான்.. மனம் திறந்த வாரிசு பட நடிகை..
By Chandru
பாலிவுட் சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் குஷ்பு. கடும் போட்டி நிறைந்த பாலிவுட்டில் இருந்து குஷ்புவின் பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்ப தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினிகாந்த நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தின் மூலம் குஷ்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1/8
Photo Credit: instagram
Share
பாலிவுட் சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் குஷ்பு. கடும் போட்டி நிறைந்த பாலிவுட்டில் இருந்து குஷ்புவின் பார்வை தென்னிந்திய சினிமா பக்கம் திரும்ப தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரஜினிகாந்த நடிப்பில் வெளியான 'தர்மத்தின் தலைவன்' திரைப்படத்தின் மூலம் குஷ்பு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/8
Photo Credit: instagram
Share
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட படங்களில் நடிக்க, தமிழில் இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. 80ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டினர்.
3/8
Photo Credit: instagram
Share
ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த குஷ்பு, பின் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். பின்னர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக தென்னிந்தியா சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார்.
4/8
Photo Credit: instagram
Share
பின்னர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த குஷ்பு, சினிமாவில் பெருமளவில் தென்படவில்லை. சினிமாவில் கலக்கிய குஷ்பு, அரசியலிலும் கலக்கி வருகிறார். இந்தியாவின் மிக பெரிய கட்சியான பாஜக கட்சிக்கு ஆதரவு கொடுத்து வருகிறார். கட்சி பணியில் ஆக்ட்டிவாக இருக்கும் குஷ்பு, அவ்வப்போது படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
5/8
Photo Credit: instagram
Share
அந்தவகையில் நடிகர் விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளியான படம் வாரிசு. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சம் ரீதியாகவும் இமாலய வெற்றி பெற்றது. இப்படத்தில் நடிகை குஷ்பு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.
6/8
Photo Credit: instagram
Share
படம் ரிலீசாகி தியேட்டர்களில் தீப்பொரு பறக்க வெளியானது. ஆனால் படத்தில் குஷ்புவை காணோம்.. ஷாக்கான ரசிகர்கள் எங்கப்பா நம்ம குஷ்பு.. என சரமாரியான கருத்துக்கள் இணையத்தால் வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. இப்படி இருக்குமோ! அப்படி இருக்குமோ! என்ற பல கேள்விகள் குஷ்புவை சுற்றி வர தற்போது இதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
7/8
Photo Credit: instagram
Share
தெலுங்கில் உருவாகியுள்ள 'ராமபாணம்' என்ற படத்தில் குஷ்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்துக்கு சென்ற குஷ்பு பேட்டி கொடுத்துள்ளார். அதில், விஜய் ஹீரோவாக நடித்த வாரிசு திரைப்படத்தில் என் கதாபாத்திரம் வெறும் 18 நிமிடங்கள் தான். ஆனால் படத்தின் நீளம் அதிகமானதால் நான் நடித்த காட்சிகளை நீக்கி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.
8/8
Photo Credit: instagram
Share
தற்போது குஷ்புவின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் இருந்த பெரிய குழப்பத்திற்கான ஒரு தீவக அமைந்துள்ளது. மேலும் நெட்டிசன்கள் சிலர் "இது எங்களுக்கு ஏற்கனே தெரியும்" உன்மையை சொல்லுங்க என விதவிதமாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications