Home / Photos
ரூ.100 கோடி வசூலை தொட்டதா எல்ஐகே.. 10 நாள் கலெக்ஷன் என்ன?
By Chandru
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த 'எல்ஐகே' திரைப்படம் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது? 100 கோடி வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: filmibeat
Share
பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெளிவந்த 4வது திரைப்படம் 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி'. விக்னேஷ் சிவன் இயக்க கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
2/6
Photo Credit: filmibeat
Share
கடந்த மூன்று படங்களில் 100 கோடி வசூல் கொடுத்த பிரதீப், இப்படத்திலும் ரூ.100 கோடி கொடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்க, எஸ்ஜே சூர்யா நெகட்டிவ் ரோலில் நடிக்க படத்தின் மீதி செம எதிர்பார்ப்பு எழுந்தது.
3/6
Photo Credit: filmibeat
Share
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டரில் ரிலீசான இப்படம், முதல் நாளில் இளைஞர்களின் கூட்டத்தை அதிகம் ஈர்க்கத் தொடங்கியது. போக போக கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படியே தலைகீழாக கூட்டம் குறையத் தொடங்கியது.
4/6
Photo Credit: filmibeat
Share
வித்தியாசமான கதைக்களத்தில் ஃபேண்டஸி ஜானரில் வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. இதனால் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியது. கோடை விடுமுறையாக இருந்தும் சொல்லும் அளவிற்கு கலெக்ஷன் இல்லை.
5/6
Photo Credit: filmibeat
Share
பிரதீப் நடித்த 3 படங்களும் தொடர்ந்து ரூ.100 கோடி வசூலித்து மெகா ஹிட் கொடுத்தது. அதேபோல் இப்படமும் 100 கோடி வசூல் செய்து செய்யுமா? 100 கோடி வசூல் மன்னனாக வலம் வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது.
6/6
Photo Credit: filmibeat
Share
95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், கடந்த 10ம் தேதி தியேட்டரில் ரிலீசானது. இதுவரை 10 நாட்களில் 54.08 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை படத்தின் பட்ஜெட்டை வசூல் செய்யாத இப்படம், 100 கோடியை தொடுமா என்பது சந்தேகமே. மேலும் வரும் நாட்களில் எதாவது மேஜிக் நடந்து கூட்டம் கூடினால் மட்டுமே 100 கோடி வசூலை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications