எல்ஐகே படத்தின் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? கலெக்ஷன் ரிப்போர்ட்!
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த எல்ஐகே திரைப்படம் கடந்த 3 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிட் நாயகன்: ரவி மோகனின் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து லவ் டுடே, ட்ராகன், டியூட் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து மக்கள் மனம் கவர்ந்தார். இவர் நடித்த 3 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த பிரதீப், 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்தார். சமீபத்தில் அப்படம் வெளியானது.
வசூல் மன்னன் ப்ரீத்: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே, ட்ராகன், டியூட் ஆகிய மூன்று படங்களும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி ஹிட்டான படங்கள். நல்ல கதையை கொண்டாடும் நம் மக்கள் பிரதீப்பின் மூன்று படங்களையும் ஆஹா ஓஹோ என கொண்டாடினர். அதன்படி பிரதீப் ரங்கநாதன் நடித்த மூன்று படங்களும் 100 கோடி ரூபாயை கடந்தது வசூல் சாதனை செய்தது. ஹாட்ரிக் 100 கோடி கலெக்ஷன் கொடுத்து வசூல் மன்னனாக மாறினார்.
படக்குழு: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரீத்தி ஷெட்டி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி'. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 10ம் தேதி எதிர்பார்ப்புடன் தியேட்டரில் ரிலீசானது.
கதை என்ன? இப்படம் ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகியுள்ளது. கதையை புரிந்துகொள்ள நாம் 2040ம் ஆண்டு பயணிக்கவேண்டும். இன்றைய திருமண மேட்ரிமோனி போல் 2040ம் ஆண்டு ஒருவர் தனது காதல் பாட்னரை தெரிந்துகொள்ள 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற செயலியை பயன்படுத்துகின்றனர். அந்த செயலியின் உரிமையாளர் எஸ்ஜே சூர்யா.
அந்த செயலி மூலம் தங்களுக்கு பிடித்தமான காதலி, காதலனை மதிப்பெண் மூலம் தேர்வு செய்த்குகொள்ளலாம். பிரதீப் ரங்கநாதன்-கீர்த்தி ஷெட்டி இருவரும் காதலித்து வருகின்றனர். அனால் அந்த செயலியில் இருவருக்கும் குறைவான மதிப்பெண் கிடைக்கவே கீர்த்தி ஷெட்டி பிரேக்அப் செய்துகொள்ளலாம் என முடிவு செய்கிறார்.
காதலை ஒரு செயலி முடிவு செய்வதா? என பிரதீப் கோபம்கொள்கிறார். அதற்கு காரணமான LIK செயலியின் உரிமையாளர் எஸ்ஜே சூர்யாவை பிரதீப் என்ன செய்கிறார்? பிரதீப்பும் கீர்த்தியும் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி சுவாரசிய கதைக்களம்.
பட்ஜெட்? வசூல்? கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் இப்படம், கடந்த 10ம் தேதி ரிலீசாகி சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், கடந்த 3 நாட்களில் 33 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா? ரூ.100 கோடியை வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications