எல்ஐகே பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்ளவுன்னு தெரியுமா? எஸ்.ஜே.சூர்யாவை முந்திய பிரதீப்? லிஸ்ட்!
எல்ஐகே பட நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? யாருக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த 10ம் தேதி தியேட்டரில் ரிலீசான ஃபேண்டஸி, ரொமான்டிக் திரைப்படம் 'லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி'. தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த பிரதீப், எல்ஐகே படத்தையும் தனது ஹிட் கணக்கில் இணைப்பாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தில் நடித்த ஸ்டார் நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
எல்ஐகே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை கௌரி கிஷன், 'கல்கி' கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.50 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
வில்லன் ரோலில் மெர்சல் காட்டிய எஸ்ஜே சூர்யா, 'சூரியன்' கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.10 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகை கீர்த்தி ஷெட்டி, தீமா கதாபாத்திரத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரின் முதல் பட சம்பளம் 6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஐகே படத்தில் ஹீரோவாக நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு சுமார் 17 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் டியூட் படத்தில் ரூ.13 கோடி சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications