ரூ.100 கோடி வசூலை மிஸ் செய்த பிரதீப் ரங்கநாதன்.. எல்ஐகே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்ன?
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த 'எல்ஐகே' திரைப்படத்தின் மொத்த வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பிரதீப் ஹீரோவாக நடித்த மூன்று படங்களும் ஹிட். அதேபோல் நான்காவது படமான 'எல்ஐகே' ரூ.100 கோடியை கடந்து வசூல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
95 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், 10 நாட்களில் 54 கோடியை கடந்தது வசூல் செய்தது. கோடை விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போக போக படத்தின் வசூலில் பெரும் பின்னடைவே ஏற்பட்டது. எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் மொத்த வசூல் சுமார் 67 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 67 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்ததால் படம் தோல்வியடைந்துள்ளது. ஹாட் ட்ரிக் ஹிட் கொடுத்த பிரதீப் தனது நான்காவது படத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.


Click it and Unblock the Notifications