தொழில்நுட்பம் முதல் பொழுதுபோக்கு வரை.. அமெரிக்க பிராண்டுகளை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள்.. என்னென்ன? சுவாரசிய லிஸ்ட்!
இந்தியர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த பொருட்கள், தொழில்நுட்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தொழில்நுட்பம்: இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் அமெரிக்க தொழில்நுட்பங்களாக ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் மென்பொருள் மற்றும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளன. இவை அனைத்தையும் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவை இல்லை என்றால் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
ஆடை: நைக், லீவிஸ், Calvin Klein போன்ற அமெரிக்காவின் ஆடை நிறுவனங்களை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்திய பிராண்டுகள் இருப்பினும் அமெரிக்க பிராண்டுகளை பயன்படுத்துவதை உயர்வாக கருதுகின்றனர்.
உணவு பொருட்கள்: உணவு பொருட்களை பொறுத்தவரை McDonald's, கேஎஃப்சி, கொக்கோகோலா, பெப்ஸி போன்ற அமெரிக்க நிறுவனங்களின் உணவு பொருட்கள் மிகவும் பிரபலமாகவும், பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமான உணவாகவும் இருந்து வருகிறது.
ஷாப்பிங்: ஷாப்பிங் பொறுத்தவரை அமெரிக்க நிறுவனமான அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
பொழுதுபோக்கு: பொழுதுபோக்கில், நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் தளங்கள் ஆகியவற்றை இந்தியர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் பொழுதுபோக்கு செயலிகளாக இருந்து வருகிறது.


Click it and Unblock the Notifications