ஐபிஎல் அணி பெண் உரிமையாளர்களின்.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுவாரசிய லிஸ்ட்!
ஐபிஎல் அணி வைத்திருக்கும் பெண் உரிமையாளர்களின் சொத்து மதிப்பு என்ன? யார் டாப்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாலிவுட் நடிகையாக ப்ரீத்தி ஜிந்தா பஞ்சாப் அணி உரிமையாளராக இருந்து வருகிறார். ப்ரீத்தியின் சொத்து மதிப்பு சுமார் 240 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
ஹைதராபாத் அணியின் ஓனர் காவ்யா மாறன். சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் மக்கள் ஆவார். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பெங்களூரு அணியின் புதிய ஓனர் அனன்யா பிர்லா. பிர்லா குழுமத்தை சேர்ந்த இவரின் சொத்து மதிப்பு சுமார் 1,770 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
கொல்கத்தா அணியின் ஓனர் ஜூஹி சாவ்லா. பெரும்பாலானோர் ஷாருக்கான் என்று தான் நினைப்பர். ஆனால் அந்த அணியின் ஓனர்களில் ஒருவர் தான் ஷாருக்கான் மற்றும் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,790 கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மும்பை அணியின் ஓனராக உள்ளார். நீதாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 23,199 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications