கூட்ட நெரிசல் இல்லாத.. அமைதியான சுற்றுலாத் தலங்களை தேடுறீங்களா? இதோ உங்களுக்கான சூப்பர் லிஸ்ட்!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு.. மக்கள் தங்களின் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல தயாராகிவிட்டனர். அதில், பெரும்பாலானோர் கொஞ்சமும் யோசித்துவிடமால் மலைப்பிரதேசங்களுக்கு செல்வதை வழக்கமாகிக் கொள்கின்றனர். கடும் கோடை வெப்பத்தை சமாளிக்க இவ்வாறு செய்கின்றனர். இதன் விளைவு கடும் கூட்ட நெரிசல். இப்படியான சூழலில் இருந்து தப்பிக்க கூட்ட நெரிசல் இல்லாத அமைதியமான சுற்றுலாத் தலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கோடை விடுமுறைக்கு ஏற்ற சூப்பரான சுற்றுலாத் தலம் 'கோகர்ணா'. கர்நாடகாவில் உள்ள இந்த கடற்கரை சுற்றுலாத் தலத்தில் இயற்கையின் அழகை கண்டு ரசிக்கலாம். ஓம் பீச், குட்லே பீச் போன்ற சூப்பரான இடங்கள் உள்ளன. கடல் உணவுகள், படகு சரிவு என குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம்.
கர்நாடகாவில் உள்ள மற்றொரு சூப்பரான சுற்றுலாத் தலம் 'கார்வார்' கடற்கரை பகுதி. குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க அமைதியான தரமான இடமாகும். அமைதியான கடற்கரை ஓரத்தில் போர் கப்பல் அருங்காட்சியகம் உள்ளது. இந்த கோடை விடுமுறைக்கு ஏற்ற தலமாகும்.
குஜராத் மாநிலத்தில் அமைத்துள்ள ஷிவ்ராஜ்பூர் கடற்க்கரை அமைதியமான சுற்றுலா இடைகளின் ஒன்று. மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ள இந்த கடற்கரையில் உங்கள் குடும்பத்துடன் கோடை விடுமுறையை அமைதியாக கொண்டாடலாம்.
கோவா பலரின் ஃபேவரைட் குற்றுலாத் தலமாக உள்ளது. ஆனால் அங்கு எங்கு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் தான். அந்த கூட்டநெரிசலில் இருந்து தப்பிக்க தெற்கு கோவாவில் உள்ள கடற்கரை பகுதியில் குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடலாம். விதவிதமான உணவுகளை ருசித்து கொண்டாடலாம்.
உலகளவில் ஏராளமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அமைதியான சுற்றுலா தலம் அந்தமான். அழகான கடற்கரை, விதவிதமான ருசியான உணவுகள், குளுமையான காற்று என குடும்பத்துடன் கோடை விடுமுறையை கொண்டாடலாம்.


Click it and Unblock the Notifications