Home / Photos
விஜய்யின் ஜனநாயகன் படத்தை போல்.. ரிலீஸ்க்கு முன்பே இணையத்தில் லீக்கான படங்கள் என்னென்ன தெரியுமா? பட்டியல்!
By Chandru
விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் தியேட்டர் ரிலீஸாகும் முன்னரே இணையத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணமான 6 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஜனநாயகன் படத்தை போல் தியேட்டர் ரிலீஸக்கு முன் இணையத்தில் லீக்கான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/7
Photo Credit: IMDB
Share
பவன் கல்யாண், சமந்தா நடிப்பில் 2013ல் வெளிவந்த ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'Attarintiki Daredi'. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த இப்படம், ரிலீசுக்கு முன் அசிஸ்டன்ட் எடிட்டர் மூலம் இணையத்தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சி கொடுத்தது.
2/7
Photo Credit: IMDB
Share
ஷாஹித் கபூர், ஆலியா பட் நடிப்பில் 2016ல் வெளிவந்த போதை பொருள் கடத்தல் திரைப்படம் 'Udta Punjab'. இப்படமும் ரிலீசாக இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீசாகி அதிர்ச்சி கொடுத்தது.
3/7
Photo Credit: IMDB
Share
2016ல் மராத்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Sairat'. படம் ரிலீசாக இரண்டே நாட்கள் இருக்கும் நிலையில் படத்தின் காட்சிகள் ரிலீசாகி அதிர்ச்சி கொடுத்தது.
4/7
Photo Credit: IMDB
Share
சன்னி தியால் நடிப்பில் 2015ல் வெளிவந்த காமெடி ஹிந்தி திரைப்படம் 'Mohalla Assi'. ரிலீசுக்கு முன் படத்தின் HD காட்சிகள் இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்தது.
5/7
Photo Credit: IMDB
Share
சரத்குமார் நடிப்பில் 2010ல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'ஜக்குபாய்'. சென்சார் செய்யப்படாத இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீசாகி அதிர்ச்சி கொடுத்தது.
6/7
Photo Credit: IMDB
Share
2016ல் ஹிந்தியில் வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி, ஹாரர் திரைப்படம் 'Great Grand Masti'. பிரபலங்கள் பலர் நடிப்பில் உருவான இப்படம், தியேட்டரில் ரிலீசாக இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில் சென்சார் செய்யப்படாத காட்சிகள் இணையத்தில் ரிலீசாகி அதிர்ச்சி கொடுத்தது.
7/7
Photo Credit: IMDB
Share
2015ல் ஹிந்தியில் வெளிவந்த பயோகிராஃபி திரைப்படம் 'Manjhi: The Mountain Man'. வெறும் சுத்தியல் வைத்து இருமலைகளிக்கும் இடையே பாதை அமைத்த நபரின் உண்மை கதை. பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் தியேட்டரில் ரிலீசுக்கு முன்னரே இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. எடிட் செய்யும் முன்னரே படத்தின் காட்சிகள் இணையத்தில் ரிலீசாகின.


Click it and Unblock the Notifications