Home / Photos
தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்கள் இவர்கள் தான்.. யாரெல்லாம்? சொத்து மதிப்பு என்ன? சுவாரசிய லிஸ்ட்!
By Chandru
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் யார் கோடீஸ்வர வேட்பாளர்கள்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: oneindia
Share
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியிடம் ரூ.17.15 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.49 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கணவர் அன்புமணியிடம் ரூ.1.51 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.6.85 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் சௌமியாவிடம் 3 கிலோ தங்கமும், அன்புமணியிடம் 960 கிராம் தங்கமும், மகளிடம் 500 கிராம் தங்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2/5
Photo Credit: oneindia
Share
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் ரூ.12.50 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.8.26 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். அதேபோல் அவரது மனைவியிடம் ரூ.11.61 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.6.17 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நயினார் நாகேந்திரனிடம் 240 கிராம் தங்கம் உள்ளதாகவும், மனைவியிடம் 560 கிராம் தங்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
3/5
Photo Credit: oneindia
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பெயரில் 50 லட்சம் சொத்து உள்ளதாம். அவரது மனைவி ராதா பெயரில் ரூ.2.16 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.3.45 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் பழனிசாமியிடம் 100 கிராம் தங்கம் உள்ளதாகவும், மனைவியிடம் 720 கிராம் தங்கம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
4/5
Photo Credit: oneindia
Share
லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார். லாட்டரி அதிபர் மார்டினின் மனைவியான லீமா ரோஸ், ரூ.139 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.909 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
5/5
Photo Credit: oneindia
Share
அதேபோல் லாட்டரி அதிபர் மார்ட்டின் பெயரில் ரூ.3,262 கோடி அசையும் சொத்துக்களும், ரூ. 887 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாம். மேலும் லீமா ரோஸ் மகன் ஜோஷ் டைசன் பெயரில் ரூ.225 கோடி அசையும் சொத்துக்களும், ரூ.439 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 6000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications