இந்த சம்மருக்கு சூப்பரான ரோடு ட்ரிப் போகணுமா? உங்களுக்கான டாப் 5 லிஸ்ட் இதோ!
2026 கோடை கொண்டாட்டத்தில் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சூப்பரான ரோடு ட்ரிப் சொல்லவேண்டுமா? உங்களுக்கான சூப்பர் பதிவு தான் இது?
பெங்களூரு-கூர்க்: அமைதியான காடுகளுக்கு இடையே 270 கிலோமீட்டர் பயணம் இருக்கும். ரங்கநாதா பறவைகள் சரணாலயம், நீர்விழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பார்த்தபடி உங்களின் பயணத்தை இனிமையாக்கலாம். நண்பர்கள், குடும்பத்துடன் பயணிக்க செம சூப்பராக இருக்கும்.
சென்னை-புதுச்சேரி: சென்னையில் இருந்து நண்பர்களுடன் ஒரு ரோடு ட்ரிப் செல்ல சிறந்த பயணமாக இருக்கும். வங்கக்கடலில் ஈரக்காற்று நம்மை தழுவியபடி 150 கிலோமீட்டர் பயணம் புது வித அனுபவமாக இருக்கும். விதவிதமான போட்டோஸ் எடுக்க கேமரா கொண்டு செல்ல மறந்துடாதீங்க.
ஹைதராபாத்-அரக்கு பள்ளத்தாக்கு: சூப்பரான நீண்ட பயணம் கொண்ட சாலை ஹைதராபாத்-அரக்கு பள்ளத்தாக்கு. சாலையின் இருபக்கங்களும் மரங்கள், பழங்குடிய கிராமங்கள் என இயற்கையின் அழகை ரசித்தபடியே 710 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம்.
பெங்களூரு - ஊட்டி: இந்த கோடையில் மிஸ் பண்ணக்கூடாத ரோடு ட்ரிப் என்றால் அது பெங்களூரு - ஊட்டி பயணம் தான் அதுவும் பந்திப்பூர் வழியாக செல்வது செம சூப்பராக இருக்கும். காட்டுக்குள் 270 கிலோமீட்டர் பயணம் யாருக்கு தான் பிடிக்காது. வனவிலங்குகளை ரசித்தபடியே பயணிக்கலாம்.
கொச்சி-மூணார்: வளைந்து நெளிந்து செல்லும் பாதை, நம்மை உரசி செல்லும் மேகங்கள் இப்படியான பயணம் யாருக்கு தான் பிடிக்காது. 130 கிலோமீட்டர் ரோடை ட்ரிப் பயணத்தை இந்த சம்மருக்கு பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications