Home / Photos
AI டெக்னலாஜி பயன்படுத்தி.. உருவாக்கப்பட்டு வரும் தமிழ் படங்களின் லிஸ்ட்..!
By Chandru
தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியாக உருவெடுத்துள்ளது AI டெக்னலாஜி. மனிதனின் அறிவாற்றலையே மிஞ்சும் அளவிற்கு AI தொழில்நுட்பம் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இந்த AI டெக்னலாஜியை பயனப்டுத்தி உருவாக்கப்பட்டு வரும் தமிழ் படங்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக்கி வரும் பாம் விடாமுயற்சி. த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட் ராஜுக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில், அஜித்தின் பிளாஷ்பேக் காட்சிகளை டீ ஏஜிங் AI தொழில்நுட்பம் பயன்படுத்தி காட்சி படுத்தி வருகின்றனர்.
2/5
Share
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் தக் லைஃப். பிரிட்டிஷ் காலத்தில் நடத்த சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதை AI தொழில்நுட்பம் உதவியுடன் காட்சி படுத்தி வருகின்றனர்.
3/5
Share
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாக்கி வரும் படம் கூலி. இப்படத்தில் ரஜினியின் இளம் வயது காட்சிகளை கொண்டுவர டீ ஏஜிங் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
4/5
Share
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இதில் ஒரு விஜயின் லுக்கை இளம் வயது விஜய்யாக மாற்ற டீ ஏஜிங் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
5/5
Share
இறுதியாக, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2 திரைப்படம். இப்படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இப்படத்தில் சில காட்சிகள் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications