தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்கள் எதுன்னு தெரியுமா? சென்னைக்கு எத்தனாவது இடம்? டாப் 5 லிஸ்ட்!
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. அதில் டாப் 5 பணக்கார மாவட்டங்கள் என்னென்ன? தனி நபர் வருமானம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளது. பின்னலாடை தொழிற்சாலைகள் அதிகமுள்ள திருப்பூரை 'டாலர் சிட்டி' என்றும் அழைப்பர். அம்மாவட்டத்தின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.4.34-4.87 லட்சம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் 4ம் இடத்தில் நாமக்கல் மாவட்டம் உள்ளது. பின்னலாடை தொழிற்சாலைகள், சிட்கோ தொழிற்பேட்டை, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகள் முக்கிய தொழில்துறை பகுதிகளாக உள்ளன. அம்மாவட்டத்தின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.4.74-5.05 லட்சம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் 3ம் இடத்தில் சென்னை உள்ளது. தமிழ்நாட்டின் ஐடி நகரமான சென்னையின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.5.77-6.46 லட்சம் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் 2ம் இடத்தில் காஞ்சிபுரம் உள்ளது. சிட்கோ தொழிற்பேட்டை, ஐடி துறைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.7.39-8.44 லட்சம் என கூறப்படுகிறது.
இறுதியாக, தமிழ்நாட்டின் பணக்கார மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. சிட்கோ தொழிற்பேட்டை, தொழில் பூங்கா, ஐடி துறைகள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் தனி நபர் வருமானம் ஆண்டிற்கு ரூ.7.47-8.54 லட்சம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications