Home / Photos
உலகளவில் மிகவும் சிறந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களின் லிஸ்ட்.. எந்தெந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
By Chandru
வீக் எண்டு வந்தாச்சு.. சிறந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களை பார்க்க ஆர்வமா இருக்கீங்களா.. உங்களுக்கான டாப் 10 திரைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
1/9
Share
2013ம் ஆண்டு வெளியான சிறந்த சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் Gravity. விண்வெளியில் சிக்கிய வீரர் எப்படி பூமி திரும்புகிறார் என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
2/9
Share
2014ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் Interstellar. விண்வெளி கதைக்களம் கொண்ட இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
3/9
Share
2014ம் ஆண்டு வெளியான படம் The dawn of planet of apes. மனிதர்களை போல் குரங்குகளும் உரிமைக்காக போராடுவதே இப்படத்தின் கதையாகும். மனிதர்களுக்கும், குரங்குகளுக்கும் இடையே நடைபெறும் மோதல்களை காட்டியுள்ளது இப்படம். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
4/9
Share
2018ம் ஆண்டு வெளியான படம் Annihilation. ஆராய்ச்சிக்காக செல்லும் ராணுவ வீரர்கள் காணாமல் போகிறார்கள். காணாமல் போனவர்களை தொடர்புகொள்ள எந்த ஒரு வழியும் இல்லாமல் போக ஓராண்டுக்கு பின்னர் ஒருவர் மாட்டும் திரும்பி வருகிறார். மர்மங்கள் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5/9
Share
2014ம் ஆண்டு வெளியான படம் Edge of tomorrow. ஏலியன்களிடம் இருந்து ஹீரோ உலகை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இப்படமாகும். இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
6/9
Share
2013ம் வெளியான சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் Her. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆப் ஒன்று தனிமையில் இருக்கும் ஆண் ஒருவருக்கு காதலியாக மாறுகிறது. அதன் பின்னர் நடப்பது தான் கதையே. இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.
7/9
Share
கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் Shin godzilla. ஜப்பானிய படமான இப்படம் காட்ஜில்லாவை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
8/9
Share
கடந்தாண்டு வெளியான சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் Snowpiercer. பிரஞ்ச் நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை தட்டி தூக்கியது.
9/9
Share
2013ம் ஆண்டு வெளியான படம் Under the skin. ஆண்களை வேட்டையாடும் ஒரு பெண்ணின் கதையாகும். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications