துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க அதிபர்கள்.. பட்டியல்!
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பளர்கள் துப்பாக்கியில் சுடப்படும் சம்பவத்தை நாம் பார்த்து வருகிறோம். அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் மூன்று முறை துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளார். அந்த வகையில் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க அதிபர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆபிரகாம் லிங்கன்: 1865ல் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள போர்ட் தியேட்டரில் நடந்த நாடகத்தை பார்த்துக்கொண்டிருந்த ஆபிரகாம் லிங்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் நெற்றியில் சுட்டு கொல்லப்பட்டார்.
வில்லியம் மெக்கின்லே: 1901ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லே அரசமைப்பை விரும்பாத அனார்கிஸ்டான லியோன் ஷோல்கோஸ் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜேம்ஸ் ஏ. கார்பீல்ட்: 1881ம் ஆண்டு வாஷிங்டன் டி.சி. ரயில்நிலையத்தில் சார்லஸ் ஜே. கிட்டோ என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தியோடர் ரூஸ்வெல்ட்: 1912ம் ஆண்டு மீண்டும் அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட தியோடர் ரூஸ்வெல்ட், தேர்தல் பிரச்சாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிர்தப்பி தொடர்ந்து உரையை தொடர்ந்தார்.
ஜான் எப். கென்னடி: 1963ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எப். கென்னடி, தனது மனைவியுடன் காரில் சென்றுகொண்டிருந்த போது லீ ஹார்வே ஆஸ்வேல்டு என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


Click it and Unblock the Notifications