Home / Photos
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் கூலி.. லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன? பெரிய லிஸ்டா இருக்கே
By Chandru
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவாகவுள்ள திரைப்படங்கள் என்னென்ன? யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளார்? என்பதை இந்த பதிவில் டீடைலாக பார்ப்போம்.
1/4
Photo Credit: filmibeat
Share
கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், 'மாநகரம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து 'கைதி' படத்தின் வித்தியாசமான கதைக்களம் மூலம் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். குறிப்பாக லோகேஷின் மேக்கிங் அனைவரையும் ஈர்த்தது.
2/4
Photo Credit: filmibeat
Share
தொடர்ந்து கமலை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார். அசத்தலான திரைக்கதை, சஸ்பென்ஸ், ட்விஸ்ட், இரண்டாம் பாகத்திற்கான லீட், சூர்யாவின் கேமியோ என விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் மூலம் தமிழ் சினிமாவின் ஸ்டார் இயக்குநர்களில் ஒருவராக ஜொலிக்கத் தொடங்கினார்.
3/4
Photo Credit: filmibeat
Share
கமலை வைத்து ஹிட் கொடுத்த லோகேஷ் ரஜினி பக்கம் திரும்பினார். ரஜினி நடிப்பில் 'கூலி' திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது. படத்தின் போஸ்டர், பாடல்கள், அனிருத்தின் இசை என ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே அதிகப்படியான ஆர்வத்தை தூண்டியுள்ளது. ரஜினியுடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
4/4
Photo Credit: filmibeat
Share
'கூலி' முடிந்த கையோடு கார்த்தியுடன் இணைந்து 'கைதி 2', அமீர் கானுடன் ஆக்ஷன் படம், கமலுடன் 'விக்ரம் 2', சூர்யாவுடன் 'ரோலக்ஸ்', 'மாஸ்டர் 2', 'லியோ 2' ஆகிய படங்களை இயக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷின் LCU இனி வரும் படங்களில் எதிர்பார்க்கலாம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications