Home / Photos
சிம்புவுக்கு ஆரம்பிக்கும் புது பிரச்சனை? படத்தை கைப்பற்ற போட்டியிடும் தயாரிப்பாளர்கள்...! என்னவா இருக்கும்?
By Chandru
சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
1/9
Share
சிம்பு நடித்துள்ள ‘மாநாடு’ படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது என தகவல் கிடைத்துள்ளது.
2/9
Share
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் பல சவாலுக்கு மத்தியில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'.
3/9
Share
இப்படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
4/9
Share
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
5/9
Share
பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
6/9
Share
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது என கூறுகின்றனர்.
7/9
Share
‘மாநாடு’ படம் வெளியான மறுநாள் படத்தைப் பார்த்த பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பெரும் தொகை கொடுத்து படத்தின் ரீமேக் உரிமையைப் பெற முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
8/9
Share
மேலும் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் கதாபாத்திரங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் இருவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
9/9
Share
இந்நிலையில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு சார்பாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications