Home / Photos
Manoj Bharathiraja: காதல் திருமணம்.. அழகான இரண்டு பெண் குழந்தைகள்.. மனோஜ் பாரதிராஜாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்!
By Chandru
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, நேற்று 25ம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரின் மறைவு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கி சோகத்தில் மூழ்கடித்துள்ளது. ஆசை ஆசையாய் வளர்த்த மகனை இழந்து மனமுடைந்துபோன பாரதிராஜா, மீளமுடியாத துயரத்தை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று நினைத்தாலே மனவேதனை தான். இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜாவின் அழகிய குடும்பத்தின் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Photo Credit: instagram
Share
கடந்த 1999ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் மனோஜ் பாரதிராஜா ஹீரோவாக நடித்து அறிமுகமான திரைப்படம் 'தாஜ்மஹால்'. இப்படத்தின் பாடல் ஒவ்வொன்றும் செம ஹிட் தான். ரசிகர்களும் மனோஜை நோட் செய்ய தொடங்கினர்.
2/8
Photo Credit: instagram
Share
அதனை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, வருஷம் எல்லாம் வசந்தம் உள்ளிட்ட பல படங்களில் இவர் ஹீரோவாக நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram
Share
ஹீரோவாகவும் மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். பல படங்களில் நடித்திருந்தாலும் என்னமோ தெரியல ஸ்டார் நடிகராக ஜொலிக்க தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
4/8
Photo Credit: instagram
Share
நடிகராகவும் மட்டுமல்லாமல் இயக்குநராகவும் அசத்தியுள்ளார். மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மனோஜ், மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
5/8
Photo Credit: instagram
Share
இவர், கடந்த 2006ம் ஆண்டு நடிகை நந்தனாவை காதல் திருமணம் செய்துகொண்டார். சாதுரியன் என்ற படத்தில் மனோஜும் நந்தனாவும் சேர்ந்து நடித்தபோது இவர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. அதன்பின்னர் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.
6/8
Photo Credit: instagram
Share
ஈஸ்வரன், மாநாடு, விருமான், சாம்பியன் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ள மானோஜ், இறுதியாக கடந்தாண்டு வெளியான 'ஸ்நேக் அண்ட் லேடர்ஸ்' என்ற வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
7/8
Photo Credit: filmibeat
Share
மனோஜுக்கு சில நாட்களுக்கு முன் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறுகின்றனர். சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய மனோஜ் நேற்று மாலை 6 மணியளவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் இறப்புச் செய்தி திரையுலகினரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.
8/8
Photo Credit: filmibeat
Share
திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் மனோஜின் மறைவுக்கு ஆழந்த இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். இவரின் இறுதி சடங்கு நாளை மாலை 4 மணியளவில் பெசன்ட் நகர் மையனத்தில் நடைபெற இருப்பதாக கூறுகின்றனர். மனோஜின் வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications