Home / Photos
மாபெரும் வசூல் வேட்டையில் 'மைக்கேல்'.. இதுவரை உலகளவில் செய்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
By Chandru
உலக பிரபலமான பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பற்றிய பயோகிராபி திரைப்படமான 'மைக்கேல்' திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: IMDB
Share
பாப் உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மைக்கேல் ஜாக்சன். அமெரிக்கரான இவர், தனது சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் கொண்டு இசை நிகழ்ச்சியில் பாடத்தொடங்கினார்.
2/6
Photo Credit: IMDB
Share
சமூக விழிப்புணர்வு பாடல்களை பாடத் தொடங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற தொடங்கினார். மைக்கேலின் பாடல்கள் உலகம் முழுவதும் பரவத்தொடங்கி கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்தது.
3/6
Photo Credit: IMDB
Share
விதவிதமான பாடல்கள் மூலம் 13 கிராமிய விருதுகளையும், பல்வேறு அமெரிக்க இசை விருதுகளையும் வென்று கின்னஸ் சாதனை படைத்தார்.
4/6
Photo Credit: IMDB
Share
2009ம் ஆண்டு தனது 50வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் திடீர் இறப்பு பாப் இசை உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
5/6
Photo Credit: IMDB
Share
இந்த நிலையில் மைக்கேல் ஜாக்சனை பற்றிய வாழ்கை வரலாற்று படத்தை ஹாலிவுட் இயக்குநர் ஆண்டோயின் புகுவா இயக்கியுள்ளார். மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரத்தில் அவரின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
6/6
Photo Credit: filmibeat
Share
உலகளவில் ரிலீசான இப்படம், இதுவரை 3,593 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் 39 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வரும் இப்படம், தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications