எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஸ்பை, திரில்லர் திரைப்படம்.. மிஸ்டர் எக்ஸ் படத்தின் 3 நாள் வசூல் என்ன?
ஆர்யா நடிப்பில் வெளிவந்த 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆர்யா: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா, 'அரண்மனை 3' படத்திற்கு பின் சொல்லும் அளவிற்கு ஹிட் படங்கள் ஒன்றும் கொடுக்கவில்லை. பழைய ஆர்யாவை எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்க இவர் நடிப்பில் சமீபத்தில் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் எதிர்பார்ப்புடன் ரிலீசானது.
படக்குழு: FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கெளதம் கார்த்திக், அதுல்யா ரவி, மஞ்சு வாரியர், சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மிஸ்டர் எக்ஸ்'. திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
கதை என்ன? இந்தியாவின் உளவுப்பிரிவில் பணியாற்றும் சரத்குமார், அணுஆயுத தயாரிப்புக்கான மூலபொருளலை பாதுகாத்து வருகிறார். அந்த மூலப்பொருளையும், சரத்குமாரையும் ரஷ்ய ராணுவத்தினர் சிறைபிடிக்கின்றனர். சரத்குமாரை மீட்க மஞ்சு வாரியர் ரஷ்ய பயணிக்க, அவரையும் ரஷ்ய ராணுவத்தினர் கைது செய்துவிடுகின்றனர்.
ரஷ்யாவிடம் சிக்கிக்கொண்ட இருவரையும் காப்பாற்ற ஆர்யா, ரஷ்ய சென்று அணுஆயுத மூலப்பொருளை கைப்பற்றி இந்தியா கொண்டுவருகிறார். அந்த மூலப்பொருளை ஆர்யாவிடம் இருந்து கெளதம் கார்த்திக் கொள்ளையடித்துவிடுகிறார்.
அணுஆயுத பொருளை ஆர்யா மீட்பாரா? இல்லையா? சரத்குமார், மஞ்சு வாரியரின் நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தின் மீதி கதை பதில் சொல்கிறது.
வசூல்? அமோக வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம், இதுவரை 3 நாட்களில் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் வாரங்களில் படத்தின் வசூல் அதிகரிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications