Home / Photos
விறு விறுப்பான டிடெக்ட்டிவ் படங்கள் பிடிக்குமா? அப்போ இந்த லிஸ்ட் உங்களுக்குத்தான்!
By Divya Bala
பொதுவாகவே ஒரு படத்தில் ஒரு விஷயத்தை தேடி கண்டுபிடிக்கும் காட்சிகள் நம்மை அதில் மும்முரமாக இழுத்துவிடும். அதுவே ஒரு கொலையை கண்டுபிடிக்கும் துப்பறியும் காட்சிகள் இருந்தால் படம் பார்க்கும் ஆர்வம் இன்னும் அதிகமாக மாறிவிடும் அப்படிப்பட்ட படங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/9
Share
சவென்: 1995ல் வெளியான இந்த படத்தை டேவிட் பிஞ்சேர் இயக்கியுள்ளார். 7 கொலைகளை செய்த சீரியல் கில்லரை தேடி கண்டுபிடிக்கும் 2 டிடெக்ட்டிவ்களின் கதையை விறு விறுப்பாக சொன்ன இந்த படத்தை நெட்பிலிக்ஸ் தளத்தில் காணலாம்.
2/9
Share
ஸ்ஓடியாக்: டேவிட் பிஞ்சேர் இயக்கத்தில் வெளியான இன்னொரு டிடெக்ட்டிவ் படமான இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுத்ததாகும். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த தொடர் கொலையை மையமாக வைத்து எடுத்த இந்த படம் நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ளது.
3/9
Share
ப்ரிஸனேர்: 2013ல் வெளியான இந்த படம் டெனிஸ் இயக்கத்தில் தொலைந்து போன மகள் மற்றும் அவள் தோழியை தேடும் அப்பாவின் கதையாகும். இந்த படம் நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.
4/9
Share
தி கேர்ள் வித் ட்ராகன் டாட்டூ: ஒரு பத்திரிகையாளரும் இன்னொரு குழுவும் சேர்த்து காணாமல் போன ஒரு பெண் மற்றும் அவளது குடும்பத்தை தேடி கண்டுபிடிக்கும் இந்த படத்தை டேவிட் பிஞ்சேர் இயக்கியுள்ளார். 2011ல் வெளியான இந்த படம் நெட்பிலிக்ஸ் மற்றும் அமேசானில் உள்ளது.
5/9
Share
தி டிபார்ட்டட்: 2006ல் வெளியான இந்த படத்தை மார்ட்டின் இயக்கியுள்ளார். க்ரைம் த்ரில்லரான இதில் ரகசிய அதிகாரியாக வரும் கதாநாயகன் மற்றும் குழுவினர் ஒரு பெரிய கும்பலை பிடிக்கும் காட்சியை விறு விறுப்பாக சொன்ன படமாகும். இது நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ளது.
6/9
Share
நைட்க்ரவ்லெர்: குற்றங்களை தேடி கண்டுபிடிக்கும் பத்திரிகையாளராக மாறும் நாயகன் என த்ரில்லிங் கலந்து சொன்ன இந்த படம் டான் கிளாராய் இயக்க 2014ல் வெளியானது. இது தற்போது அமேசான் பிரைமே மற்றும் நேட்ப்பிலிக்சில் உள்ளது.
7/9
Share
ஷட்டர் ஐலண்ட்: பல கொலைகளை செய்த ஒருவன் மருத்துவமனையில் இருந்து தப்பித்து செல்ல அவனை தேடும் படமான இதை மார்ட்டின் இயக்க 2010ல் வெளியானது. இந்த படத்தை நெட்பிலிக்ஸ் தலத்தில் காணலாம்.
8/9
Share
கான் பேபி கான்: காணாமல் போன 4 வயது குழந்தையை தேடும் 2 டிடெக்ட்டிவ்கள் சந்திக்கும் சவால்களை சொன்ன இந்த படம் பென் இயக்க 2007ல் வெளியானது. நெட்பிலிக்ஸ் தலத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.
9/9
Share
விண்ட் ரிவர்: டெய்லர் இயக்கத்தில் வெளியான இந்த படம்கொலையான பெண்ணின் பின்னணியை ஒரு வனவிலங்கு அதிகாரி தேடி கண்டுபிடிக்கிறார். இது நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications