Home / Photos
அமேசான், நெட்பிளிக்ஸ் இருக்கட்டும்.. சோனி லைவ் ஓடிடி-யில் பார்க்கவேண்டிய.. டாப் 6 த்ரில்லிங் மலையாள படங்களின் லிஸ்ட்!
By Chandru
அமேசான், நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் வெளியான த்ரில்லிங், ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு சோனி லைவ் ஓடிடி-யில் வெளியான த்ரில்லிங் மலையாள திரைப்படங்களின் டாப் 6 லிஸ்டை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
2022ம் ஆண்டு வெளியான த்ரில்லிங் திரைப்படம் அப்பன். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தை சுற்றி நடைபெறும் சிக்கல்களே இப்படத்தின் கதைக்களம். இப்படத்தை சோனி லைவ் ஓடிடி கண்டு ரசிக்கலாம்.
2/6
Share
பாபி மற்றும் சஞ்சய் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான மலையாள த்ரில்லிங் திரைப்படம் kaanekkaane. சுராஜ் வெஞ்சாரமூடு, டோவினோ தாமஸ், ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்ருதி ராமச்சந்திரன் நடிப்பில் வெளியான த்ரில்லிங், சஸ்பென்ஸ் திரைப்படமாகும். பிரச்சனையில் சிக்கிய மகளை காப்பாற்றும் அப்பாவின் கதையே இப்படத்தின் கதைக்களம்.
3/6
Share
இயக்குநர் கிரிஷாந்த் இயக்கத்தில் அலெக்சாண்டர் பிரசாந்த், தர்ஷனா ராஜேந்திரன், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் புருஷ பிரேதம். த்ரில்லர் பிரியர்களுக்கு ஏற்ற படமாகும்.
4/6
Share
இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் வெளியான த்ரில்லிங் திரைப்படம் அந்தாக்ஷரி. சைஜு குருப், பிரியங்கா நாயர், சுதி கொப்பா, இஷிதா சிங் உள்ளிட்டோர் நடிப்பில் 2022ம் ஆண்டு இப்படம் வெளியானது. க்ரைம், த்ரில்லிங் படமாக வெளியாகி மக்களை அதிகம் ஈர்த்தது.
5/6
Share
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளியான படம் சல்யூட். பழைய கேஸ் ஒன்று தூசுத்தட்டும் போலீசை சுற்றி நடைபெறும் த்ரில்லிங் படமாகும்.
6/6
Share
பெண் இயக்குநர் ரீதினா இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் வெளியான த்ரில்லிங் திரைப்படம் புழு. மம்முட்டியின் நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்திருக்கும். த்ரில்லர் பிரியர்களுக்கு நல்ல தீனியாக இப்படம் அமையும்.


Click it and Unblock the Notifications