OTT: முனிஷ்காந்த் காமெடியில் வெளிவந்த திரைப்படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
ஒவ்வொரு காமெடி நடிகர்களுக்கும் அவர்களுக்கே உரித்தான தனி திறமை உண்டு. பாடி லாங்குவேஜ், டைமிங் என வ்வ்வ்வ்ருவரின் தனித்துவம் மக்களால் ரசிக்கும்படியாக இருக்கும். யோகி பாபு, சூரி, சந்தானம் இவர்களின் வரிசையில் என்ட்ரி கொடுத்தவர் தான் காமெடி நடிகர் முனிஷ்காந்த். ஆரம்பத்தில் சிறு சிறு ரோலில் வந்தாலும் மக்களின் கவனம் ஈர்க்க தவறியதில்லை. பின்னர் வெவ்வேறு படங்களில் முக்கிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சிம்மாசனத்தை பிடித்துக்கொண்டார். காமெடி சென்ஸ் மூலம் மக்களை மனம் கவர்ந்த இவர், ஹீரோவாகவும் தற்போது என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் முனிஷ்காந்தின் அசத்தலான காமெடியில் வெளிவந்த படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஷ்ணு விஷால் நடிப்பில் 2014ல் வெளிவந்த காமெடி, ரொமான்டிக் திரைப்படம் 'முண்டாசுப்பட்டி'. சினிமாவில் ஹீரோ வாய்ப்புக்காக போராடும் முனிஷ்காந்தின் கதாபாத்திரம் அனைவராலும் அதிகம் ரசிக்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மக்கள் அதிகம் கவனிக்கப்பட்டார். முனிஷ்காந்தின் அசத்தல் காமெடி காட்சிகள் நிறைந்த இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
ஜெகன், கௌரி கிஷன், அஞ்சு குரியன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன், கிரைம், திரில்லர் திரைப்படம் 'அதர்ஸ்'. திரில் காட்சிகளுடன் சேர்ந்து பயணிக்கும் முனிஷ்காந்தின் காமெடி காட்சிகள் பார்வையாளர்களை கட்டிபோட்டுள்ளது என்றே சொல்லலாம். இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
தரமான அடல்ட் காமெடி திரைப்படம் 'பெருசு'. வைபவ், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முனிஷ்காந்தின் கதாபாத்திரம் படத்தின் வெற்றிக்கு வலுர்த்துள்ளது. கலக்கலான இந்த காமெடி படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்து ரசிக்கலாம்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அறிமுக படமான 'மாநகரம்' படத்தில் முனிஷ்காந்த் முக்கிய ரோலில் நடித்திருப்பார். சீரியசாக நகரும் கதைக்களத்தில் சிரிப்பை ஏற்படுத்தும் முனிஷ்காந்தின் நடிப்பு வேற லெவல் என்றே சொல்லலாம். இந்த சூப்பர் ஹிட் படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் காணலாம்.
கடந்த நவம்பர் மாதம் தியேட்டரில் ரிலீஸான காமெடி, ஹாரர், திரில்லர் திரைப்படம் 'ரஜினி கேங்'. அசத்தலான இந்த காமெடி படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
முனிஷ்காந்த் நாயகனாக நடித்து வெளிவந்த காமெடி திரைப்படம் 'மிடில் கிளாஸ்'. மக்களின் நல்ல வரவேற்பு பெற்ற இப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க


Click it and Unblock the Notifications