வெறும் ஐந்தே நாட்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நந்தினி.. வாங்கிய சம்பளம் எவ்வளவு? கணிப்பு!
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர் நந்தினி வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சீசன் 9: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை போலவே இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த அக்டொபர் 5ம் தேதி மிகவும் பிரமாண்டமாக ஒளிபரப்பான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கம் போல் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
போட்டியாளர்கள்: மக்களுக்கு பரீட்சியமான, பரீட்சியம் இல்லாத முகம் என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதில், மலையாள மாடல் அழகியான அப்சரா சி.ஜே ஒரு திருநங்கை எனது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியா பிரபலங்கள்: கடந்த சீசன்களை விட இந்த சீசனில் அதிகப்படியான சோசியல் மீடியாயா பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர். குறிப்பாக திவாகர் மற்றும் பலூன் அக்கா என்று அழைக்கப்படும் அரோரா சின்க்ளேர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
ஆரம்பமே சண்டை: பிற சீசன்களை விட இந்த சீசனில் பிரச்னை இரண்டாம் நாளில் இருந்தே தொடங்கியது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்துகொண்டனர். பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரே கூச்சல் குழப்பம் தான்.
வெளியேறிய நந்தினி: சண்டை சச்சரவுமாக இருக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பதே டாஸ்க் தான். ஆனால் அதனை பொறுத்துக் கொள்ளமுடியாத நந்தினி, இந்த வீட்டில் என்னால் இருக்கமுடியாது என வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் சமாதானம் செய்தும் அடம்பிடித்த நந்தினி, அவரின் விருப்பத்திற்கேற்ப நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர்.
சம்பளம் எவ்வளவு? பிக் பாஸ் போட்டியாளர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் ரகசியமானது. போட்டியாளர்களுக்கும், பிக் பாஸுக்கும் மட்டுமே தெரியும் என கூறுகின்றனர். இருப்பினும் சில கணிப்புகள், போட்டியாளர்களின் பாப்புலாரிட்டி ஆகியவற்றின் அடிப்படைடியில் சம்பளம் யூகிக்கப்படுகிறது. அந்த வகையில் பிரபலம் அல்லாத மாடல் அழகியான நந்தினிக்கு குறைந்த தொகையான ஒரு நாளுக்கு 7-10 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் 5 நாட்கள் இருந்த நந்தினி சுமார் ரூ.45 -50 வரை சம்பளம் வாங்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. மேலும் நந்தினி வெளியேறியது பலருக்கும் வருத்தம் தான்.


Click it and Unblock the Notifications