OTT Clicks: ஒரு வருடத்திற்கு பின் ஓடிடியில் ரிலீசான த்ரில்லர் திரைப்படம்.. வேற லெவல் ஹிட்.. என்ன படம்? எந்த ஓடிடி?
திரில் திரைப்படம் யாருக்கு தான் பிடிக்காது? அதிலும் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்திருந்தால் சொல்லவாவேனும்.. அப்படியான திரில்லர் திரைப்படத்தை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
த்ரில் திரைப்படங்களுக்கு என்றும் மவுசு அதிகம் தான். குறிப்பாக ஓடிடி தளங்களில் த்ரில் படங்களுக்கான தேடல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான த்ரில் படத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். தியேட்டரில் கவனம் ஈர்க்காத இப்படம் ஓடிடியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த படம் தான் 'Brahmavaram PS Paridilo'. வாங்க பார்ப்போம்.
படக்குழு: இயக்குநர் இம்ரான் சாஸ்திரி இயக்கத்தில் ஸ்ரவந்தி பெல்லம்கொண்டா, குரு சரண், சம்மேத காந்தி, ரூபா லட்சுமி, சூர்யா ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் 'Brahmavaram PS Paridilo'. இப்படம் கடந்த வருடம் தியேட்டரில் ரிலீசானது.
கதை? காவல் நிலையத்திற்கு முன் தலை துண்டிக்கப்பட்ட பெண் சடலம் ஒன்று கண்டறியப்படுகிறது. படத்தின் முதல் காட்சியே திகிலுடன் தொடங்குகிறது. அது யாருடைய உடல்? ஏன் கொலை செய்யப்பட்டார்? யார் செய்தது? என்ற கேள்விகளுடன் படம் தொடங்குகிறது. மற்றொரு பக்கம் போலீஸ் விசாரணையும் தொடங்குகிறது.
கொலைக்கு முன் என்ன நடந்தது என படத்தின் கதை முன்னோக்கி செல்ல படம் விறுவிறுப்புடன் நகர்கிறது. போலீஸ் விசாரணை, ட்விஸ்ட் காட்சிகள், த்ரில்லிங் சம்பவங்கள் என படத்தின் திரைக்கதை வேறே லெவல். கொலை யார் செய்தது என்பதே படத்தின் முழு கதை.
கடந்தாண்டு தியேட்டரில் வெளிவந்த இப்படம் போதிய வரவேற்பு பெறாத நிலையில் ஒரு வருடங்களுக்கு பின் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து வருகிறது.
எந்த ஓடிடி? ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது. இந்த வீக் எண்டு தரமான திரில்லர், சஸ்பென்ஸ் படம் பார்க்க விரும்புபவர்கள் இப்படத்தை அமேசான் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications