OTT: தீவில் சிக்கிய நண்பர்கள் குழு.. அட்வென்ச்சர் பயணம் டேஞ்சரான கதை.. தரமான இந்த த்ரில் படத்தை பாத்துருக்கீங்களா? எந்த ஓடிடி?
கோடை விடுமுறைக்கு அட்வென்ச்சர் செல்லும் பள்ளி மாணவர்களின் த்ரில் கதையை பற்றி பார்ப்போம்.
த்ரில்: திரில்லர் படம் யாருக்கு தான் பிடிக்காது.. அதிலும் டீன் ஏஜ் திரில்லர் கூடவே அட்வென்ச்சர் சேர்ந்திருந்தால் படம் வேற லெவலில் இருக்கும். திருப்பங்கள், சஸ்பென்ஸ் எப்போ என்ன நடக்கும் போன்ற விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரிக்கும். அப்படியான சுவாரசியம் நிறைந்த த்ரில் படத்தை பற்றி நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
ஹாலிவுட் படம்: 2024ல் வெளிவந்த டீன் ஏஜ் ஹாரர், அட்வென்ச்சர், ஃபேண்டஸி திரைப்படம் 'Monster Summer'. ஹாலிவுட் இயக்குநர் டேவிட் ஹென்றி இயக்கியுள்ளார். இளம் ஹாலிவுட் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
கதை என்ன? பள்ளியில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து லீவை என்ஜாய் செய்ய நண்பர்கள் குழு முடிவு செய்கின்றனர். அதன்படி ஒரு தீவுக்கு அட்வென்ச்சர் பயணமாக செல்வோம் என்று முடிவு செய்கின்றனர். இவர்களுக்கு துணையாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி செல்கிறார்.
தீவுக்கு சென்ற நண்பர்கள் குழு அந்த இடத்தை எக்ஸ்ப்ளோர் செய்ய தொடங்குகின்றனர். டீன் ஏஜ் இளைஞர்கள் தானே அதற்கு ஏற்ற குறும்புத்தனமும் இருக்குமே. இவர்களை கட்டுப்படுத்துவதே அந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் பெரும் வேலையாக உள்ளது. வழக்கம் போல் அந்த சிறுவர்களும் அதிக சேட்டை செய்து வருகின்றனர்.
போக போக ஜாலியான அட்வென்ச்சர் டூர் திகில் டூராக மாறுகிறது. மர்மமான பல அமானுஷ்ய சக்திகளை எதிர்கொள்கின்றனர். அமானுஷ்ய சக்திகளால் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவே அதில் இருந்து தப்பித்தார்களா? அந்த அமானுஷ்ய சக்தி என்ன? இப்படியான திகில் கேள்விகளுக்கான பதிலே படத்தின் மீதி கதை.
எந்த ஓடிடி? சஸ்பென்ஸ், ட்விஸ்ட், த்ரில் சம்பவங்கள் நிறைந்த இப்படம், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் ஓடிடி தளங்களில் ரிலீசானது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளும் இப்படத்தை பார்க்கலாம். இந்த வீக் எண்டு தரமான இந்த த்ரில் படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications